Top
undefined
Begin typing your search above and press return to search.

நாடு முழுவதும் ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு - மத்திய அரசு.!

நாடு முழுவதும் ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு - மத்திய அரசு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Jun 2020 9:50 PM GMT

நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து ஊரடங்கு தளர்வு 2.0 தொடர்பான புதிய உத்தரவுகளை மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.

புதிய வழிகாட்டு நெறிமுறைகள்:-

ஊரடங்கு தளர்வு 2.0 ஜூலை 31-ம் தேதி வரை அமலில் இருக்கும்.

பள்ளிகள், கல்லூரிகள், கல்வி மற்றும் பயிற்சி மையங்கள், சர்வதேச விமானங்கள், மெட்ரோ ரெயில், சினிமா, உடற்பயிற்சி நிலையம், நீச்சல் குளம், மத கூட்டங்கள் உள்ளிட்டவை செயல்பட

ஜூலை 31 ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது.

சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சாரம், மதம் நிகழ்ச்சிகளும் மக்கள் கூட்டமாக கூடவும் விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும்.

இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் உள்ள முழு ஊரடங்கு தொடர்ந்து நடைமுறையிலேயே இருக்கும். இந்த நேரத்தில் அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு மட்டும்

விலக்கு அளிக்கப்படுகிறது.

பொது இடங்கள், வேலை செய்யும் இடங்கள், பயண நேரங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்.

உள்நாட்டு விமானங்கள், பயணிகள் ரெயில் சேவைகள் குறைந்த பட்ச எண்ணிக்கையில் இயங்க ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவை பகுதி வாரியாக தொடர்ந்து நீட்டிக்கப்படும்.

'UNLOCK-2' வழிகாட்டு நெறிமுறைகள் சரிவர பின்பற்றப்படுகிறது என்பதை மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் உறுதிபடுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





Next Story