Top
undefined
Begin typing your search above and press return to search.

தி.மு.கவினர் நடத்தும் 47 பள்ளிகளில் மாணவர்களிடம் 3வது மொழியாக இந்தியை திணிக்கிறார்கள் - தி.மு.கவின் இந்தி எதிர்ப்பு கள்ளத்தனத்தை அம்பலப்படுத்திய 'சிங்கம்' அண்ணாமலை #DMK #MKStalin #Hindhi @annamalai_k

தி.மு.கவினர் நடத்தும் 47 பள்ளிகளில் மாணவர்களிடம் 3வது மொழியாக இந்தியை திணிக்கிறார்கள் - தி.மு.கவின் இந்தி எதிர்ப்பு கள்ளத்தனத்தை அம்பலப்படுத்திய சிங்கம் அண்ணாமலை #DMK #MKStalin #Hindhi @annamalai_k

Mohan RajBy : Mohan Raj

  |  18 Sep 2020 10:30 AM GMT

சமீபத்தில் பா.ஜ.க தலைவர்கள் திராவிட கட்சிகளின் அரசியல் சாயத்தை மக்களுக்கு உணர்த்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றனர். அதிலும் குறிப்பாக தி.மு.க'வினரின் அரசியல் கபடநாடகங்களை மக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் வேலையை சிறப்பாக செய்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் பா.ஜ.க'வில் இணைந்த 'சிங்கம்' அண்ணாமலை ஐ.பி.எஸ் தி.மு.க'வின் இந்தி எதிர்ப்பு வேஷத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கூட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போழுது அவர் பேசியதாவது, "இந்தியை கட்டாய மொழியாக மத்திய அரசு அறிவிக்கவில்லை. தி.மு.க'வினர் நடத்தும் 47 பள்ளிகளில் தான் இந்தி 3வது மொழியாக திணிக்கப்படுகிறது" என்று கூறினார். மேலும் பேசிய அவர், "நடிகர் சூர்யா நீட் தேர்வு பற்றி இன்னும் புரிந்துகொள்ள வேண்டும். நீட் தேர்வு அச்சத்தால் சில மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது துரதிர்ஷ்டவசமானது. நீட் தேர்வு குறித்து தவறான பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

நீட் விவகாரத்தை அரசியல் தலைவர்கள் அரசியலாக்குகிறார்கள். சூர்யாவின் கேள்விகளுக்கான விடையை 2020 நீட் ரிசல்ட் சொல்லும். நீட் தேர்வு ரிசல்ட் வந்த பின்னர், நடிகர் சூர்யா நீட் குறித்த தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார்" என தெரிவித்தார்.

Next Story