Top
undefined
Begin typing your search above and press return to search.

பிரதமர் அறிவித்த அம்பன் நிவாரண நிதி ரூ.500 கோடியை பெற்ற ஓடிஷா, நிதியை பெற நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசை குறை கூறும் மம்தா.!

பிரதமர் அறிவித்த அம்பன் நிவாரண நிதி ரூ.500 கோடியை பெற்ற ஓடிஷா, நிதியை பெற நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசை குறை கூறும் மம்தா.!

Arjunan IlayarajaBy : Arjunan Ilayaraja

  |  25 May 2020 3:19 AM GMT

மத்திய அரசு அம்பன் புயல் முன்னேச்சரிக்கை நடவடிக்கை எடுத்தும் மத்திய அரசை குறை கூறுவது மட்டுமே மம்தாபானர்ஜியின் தலையாய பணியாக உள்ளது.

பிரதமர் மோடி புயலால் பாதிக்கபட்ட பகுதிகளை ராணுவ உலங்கு ஊர்தி மூலம் பார்வையிட்டார் பின்னர் மேற்குவங்க மாநில அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தில் கலந்துகொண்டார்.

மேற்கு வங்க மாநிலத்திற்கு முதற்கட்டமாக ரூபாய். 1000 கோடி பிரதமர் மோடி அறிவித்தார் ஆனால் இதுநாள் வரை நிவாரணத்தை பெற முறையாக அலுவல் ரீதியான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மத்திய அரசை குறை கூறி மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார் மம்தா ஆனால் ஓடிஷா மாநில அரசு அலுவல் ரீதியாக மத்திய அரசை அனுகி நிதியை பெற்றது.

அம்பன் புயலால் ஏற்பட்ட சேதங்களை சீரமைப்பதற்காக பிரதமர் அறிவித்த ரூ.500 கோடி நிதியுதவியை 24 மணி நேரத்தில் ஒடிஷா மாநில அரசு பெற்றுகொண்டது.

அம்பன் புயல் காரணமாக ஒடிஷா மாநிலம் மிகுந்த பாதிப்பை எதிர்கொண்டது. சுமார் 10 மாவட்டங்களை சேர்ந்த 44.5 லட்சம் பேர் புயலால் பாதித்துள்ளனர்.

புயல் பாதித்த பகுதிகளை கடந்த வெள்ளியன்று பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார்.

ஆய்வு முடித்து ஒடிஷா மாநிலத்திற்கு புயல் நிவாரண நிதியாக ரூ.500 கோடி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

ஓடிஷாவில் புயலால் பாதிக்கப்பட்ட 10 மாவட்டங்களில் சீரமைப்பு பணிகளை மாநில அரசு மேற்கொண்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 19 பிரிவினர், ஒடிஷா பேரிடர் மேலாண் படையை சேர்ந்த 12 குழுவினர் மற்றும் 156 தீயணைப்பு படை குழுக்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஓடிஷா மாநில சிறப்பு நிவாரண ஆணையர் பிகே ஜீனா தனது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் நிவாரணம் அறிவித்த 24 மணி நேரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் ரூ.500 கோடியை ஒடிசா மாநிலத்திற்காக விடுவித்துள்ளது. இதற்காக பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Next Story