Top
undefined
Begin typing your search above and press return to search.

மோசடி செய்யப்பட்ட 6 லட்ச ரூபாயை திரும்பப்பெற்ற ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகம்.!

மோசடி செய்யப்பட்ட 6 லட்ச ரூபாயை திரும்பப்பெற்ற ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகம்.!

JananiBy : Janani

  |  15 Sep 2020 2:02 PM GMT

கடந்த வாரம் ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் வங்கிக்கணக்கிலிருந்து மோசடிக்காரர்க எடுக்கப்பட்ட 6 லட்ச ரூபாய் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) திரும்பளித்துள்ளது. கடந்த நான்கு மாதங்களில் அயோத்தி கோவில் அறக்கட்டளை மேல் நடத்தப்பெற்ற இரண்டாவது சைபர் தாக்குதலாகும்.

தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து மோசடி செய்த பணத்தினை திரும்பத் தரக் கோரி வங்கிக்குக் கடிதம் எழுதியதாக ராமர் கோவிலின் அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய் கூறினார். SBI அயோத்தி கிளையின் மேலாளர் பிரியான்ஷு சர்மா, " குளோன் செய்யப்பட்ட காசோலைகளை மோசடிக்காரர்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வழங்கியுள்ளனர். தற்போது PNB யிடம் அந்த பணத்தை மீட்டு கோவில் அறக்கட்டளையிடம் திருப்பி செலுத்தியுள்ளோம்," என்று கூறினார். மேலும் பணத்தைத் திரும்பப்பெற்றதை அறக்கட்டளை உறுதிசெய்துள்ளது.

கடந்த வாரம் லக்னோவில் இருக்கும் SBI அலுவலகத்தில் மூன்றாவது போலி காசோலை குறித்துச் சரிபார்க்கப்பட்ட 10 நாள் இடைவெளியில் அறக்கட்டளை நிர்வாகிகளின் கையொப்பமிட்ட இரண்டு குளோன் செய்யப்பட்ட காசோலை கொண்டு இந்த பணம் எடுக்கப்பட்டுள்ளது.

Next Story