Top
undefined
Begin typing your search above and press return to search.

சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கு மத்திய அரசு ஒதுக்கிய கல்வித்தொகை: சென்ற 6 ஆண்டுகளில் மட்டும் ரூ 11 ஆயிரம் 690 கோடி.!

சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கு மத்திய அரசு ஒதுக்கிய கல்வித்தொகை: சென்ற 6 ஆண்டுகளில் மட்டும் ரூ 11 ஆயிரம் 690 கோடி.!

R SubbaiahBy : R Subbaiah

  |  15 Sep 2020 12:19 PM GMT

சிறுபான்மை சமூகங்கங்களை சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு சென்ற 2014-15 முதல் ரூ.11,690.81 கோடி அளவில் மத்திய அரசு 4 கோடி ஸ்காலர்ஷிப் விநியோகித்துள்ளது: நாடாளுமன்றத்தில் மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி எழுத்துப்பூர்வ பதிலில் மாநிலங்களவையில் தகவல் தெரிவித்தார். மத்திய சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகம் பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள், சமணர்கள், முஸ்லிம்கள், பார்சிகள் மற்றும் சீக்கியர்கள் என ஆறு அறிவிக்கப்பட்ட சிறுபான்மை சமூகங்களின் சமூக-பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது.

"2014-15 முதல் இன்றுவரை, சிறுபான்மை சமூகங்களின் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு மொத்தம் 4,00,06,080 உதவித்தொகை விநியோகிக்கப்பட்டுள்ளது, இதற்காக இதுவரை செலவான மொத்த தொகை ரூ .11,690.81 கோடி என்று அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார். 2015-16 முதல் 2019-20 வரையிலான காலகட்டத்தில் அமைச்சகத்தின் பல்வேறு உதவித்தொகை திட்டங்களின் கீழ் 3,06,19,546 பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்காக 9223.68 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது, இதில் சுமார் 54 சதவீத உதவித்தொகை சிறுபான்மை இனத்தை சேர்ந்த மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015-16 முதல் 2019-20 வரையிலான காலகட்டத்தில், சிறுபான்மை விவகார அமைச்சகத்துக்கு ஒதுக்கப்பட்ட மொத்த நிதி ரூ .21160.84 கோடியாகவும், உண்மையான செலவு ரூ .19,201.45 கோடியாகவும் இருந்தது, இது ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில் சுமார் 90.75 சதவீதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story