Top
undefined
Begin typing your search above and press return to search.

அடுத்த முறையும் மோடி தான் பிரதமராக வரவேண்டும் என 70% இந்திய மக்களின் விருப்பம்.!

அடுத்த முறையும் மோடி தான் பிரதமராக வரவேண்டும் என 70% இந்திய மக்களின் விருப்பம்.!

Vignesh KBy : Vignesh K

  |  2 Jun 2020 5:24 AM GMT

அடுத்த முறையும் இந்தியாவின் பிரதமராக 'இரும்பு மனிதர்' நரேந்திர மோடி தான் வரவேண்டும் என 70% இந்திய மக்கள் விரும்புகிறார்கள் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்

இதனைப் பற்றி அவர் கூறியது: ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அங்கீகாரத்தை விலக்கிய பிரதமர் மோடி ஒரு இரும்பு மனிதர். அடுத்து வரும் தேர்தலிலும் அவர் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக வரவேண்டும் என 70% இந்தியர்கள் விருப்பம் கொண்டுள்ளனர். மோடி அவர்கள் மீண்டும் பிரதமரானால் நாட்டில் பல பிரச்சனைகளை அகற்றி தவிர்த்து விடுவார் என இளைஞர்கள் நம்பிக்கையோடு உள்ளனர்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் ஒன்றாக செயல்பட்டு வளர்ச்சியை மேற்கொள்ள வேண்டும் என நம்பிக்கையோடு இருப்பவர்.முத்தலாக் ஒழிப்பு, வந்தே பாரத் மிஷன், புதிய மோட்டார் வாகன சட்டம், ராமர் கோவில் போன்ற பல முக்கிய பிரச்சினைகளை எடுத்து அவர் ஆட்சியில் தீர்த்து வைத்தார்.


இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுதலை சிறப்பாகக் கையாண்டுள்ளார். 130 கோடி இந்திய மக்கள் தொகையில் இந்த அளவு கையாளுவது அவ்வளவு எளிதல்ல. ‌ இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்டு எடுக்க 20 லட்சம் கோடி மதிப்பிலான பல திட்டங்களை கொண்டுவரஉள்ளர்.

இவ்வாறு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கூறியுள்ளார்.

Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2550474

Next Story