Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 7,19,364 பேருக்கு கொரோனா பரிசோதனை - ஐ.சி.எம்.ஆர் புதிய சாதனை.!

இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 7,19,364 பேருக்கு கொரோனா பரிசோதனை - ஐ.சி.எம்.ஆர் புதிய சாதனை.!

Vignesh KBy : Vignesh K

  |  9 Aug 2020 11:15 AM GMT

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால் இந்தியாவில் இதுவரை 21 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 43 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளார். இதில் 14,80,884 பேர் குணம் அடைந்துள்ளனர், 6,28,747 பேர் சிகிக்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும், ஆந்திரா பிரதேஷ் மூன்றாவது இடத்திலும் உள்ளது.



இந்தியாவில் இதுவரை 2,41,06,535 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 7,19,364 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தி ஐ.சி.எம்.ஆர் புதிய சாதனை செய்துள்ளது.



மேலும், இந்தியாவில் கொரோனாவை அழிக்க தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது குணம் அடைந்தோர் விகிதம் 68.78 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 2.02 சதவீதமாகவும் உள்ளது.



Next Story