Top
undefined
Begin typing your search above and press return to search.

பீகாரில் மக்களின் 86 ஆண்டு கால கனவை நினைவாக்கிய பிரதமர் மோடி - கோசி ரயில் பாலத்தை திறந்து வைத்து அசத்தினார்.!

பீகாரில் மக்களின் 86 ஆண்டு கால கனவை நினைவாக்கிய பிரதமர் மோடி - கோசி ரயில் பாலத்தை திறந்து வைத்து அசத்தினார்.!

Vignesh KBy : Vignesh K

  |  18 Sep 2020 11:37 AM GMT

பிகார் மாநிலத்தின் கோசி ஆற்றின் குறுக்கே பிரம்மாண்ட ரயில்வே பாலம் கட்டுவதற்கு கடந்த 2003 முதல் 2004 ஆம் ஆண்டு வரை மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதனால் ரூபாய்.516 கோடி மதிப்பில் 1.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாலம் கட்டும் வேலைகள் நடந்தது. கொரோனா சமயத்தில் இந்த பாலம் கட்டும் வேலை முடிவு அடைந்ததால், பிரதமர் மோடி அவர்கள் இன்று காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். பின்பு பீகாரின் புதிய ரயில் பாதைகளையும், மின்பாதை திட்டங்களையும் இன்று தொடங்கி வைத்தார்.

வடகிழக்கு மாநிலத்தை இணைக்கும் விதமாக கோசி ரயில் பாலம் உள்ளது. தற்போது பீகார் மக்களின் 86 ஆண்டு கால கனவை பிரதமர் மோடி நிறைவேற்றியுள்ளார். அது மட்டுமல்லாமல் இந்திய நேபாள எல்லையில் இந்த பாலம் முக்கியமாக உள்ளது. இந்த பாலத்தைத் திறந்து வைத்துப் பேசிய பிரதமர் மோடி கூறியது; பீகார் மாநிலத்தில் இன்று ரூபாய்3,000 கோடி மதிப்பீட்டில் துவங்கி வைத்திருக்கும், இந்த திட்டங்கள் பீகார் ரயில்வே இணைப்பை வலிமைப்படுத்தியது மட்டுமல்லாமல் மேற்கு வங்காளம் மற்றும் கிழக்குப் பகுதியில் ரயில் இணைப்பையும் வலுப்படுத்தியுள்ளது.

கடந்த ஆறு வருடங்களில், புதிய இந்தியாவின் எண்ணங்கள் மற்றும் சுயசார்பு இந்தியா திட்டத்தின் எதிர்பார்ப்புகளின்படி ரயில்வேயே மேம்படுத்தும் வேலைகள் நடந்துவருவதாக தெரிவித்துள்ளார்.

Next Story