Top
undefined
Begin typing your search above and press return to search.

ராஜஸ்தான் : தனக்கு கொரானாத் தொற்று இருப்பதை மறைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த Dr. இப்ராஹிம் கைது.!

ராஜஸ்தான் : தனக்கு கொரானாத் தொற்று இருப்பதை மறைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த Dr. இப்ராஹிம் கைது.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 May 2020 9:55 AM GMT

கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட பிறகும் நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்ததாக ஒரு மருத்துவர் ராஜஸ்தான் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று இந்தியா டிவி தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் ராஜஸ்தானின் ஜலவரில் பதிவாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுகள் அந்த நகரத்தில் இரண்டு நாட்களுக்குள் 200 ஆக அதிகரித்ததை அடுத்து மருத்துவர் கைது செய்யப்பட்டார். ஜல்ராபத்தானில் ஜலவரில் ஒரு தனியார் கிளினிக் நடத்தி வருகிறார் மருத்துவர் இப்ராஹிம். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பற்றிய விவரங்களை மறைத்து, நோயாளிகளுக்கு தனது கிளினிக்கில் இரண்டு நாட்கள் சிகிச்சை அளித்தார்.

ஜல்வாரில் கடந்த வாரம் முதல் கொரானா நோய்த் தொற்று அதிகரித்து ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்டாக உருவாகியிருக்கிறது . கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஜலவரில் இருந்து குறைந்தது 64 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

கொரோனா வைரஸ் பரப்பி, தொற்று நோய்கள் சட்டத்தை மீறியதற்காக ராஜஸ்தான் காவல்துறை இப்போது மருத்துவர் இப்ராஹிமை கைது செய்துள்ளது.

இதற்கிடையில், ராஜஸ்தான் மாநிலத்தில் 7,703 கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன, அதில் 173 பேர் இறந்துள்ளனர்.

(இது வளரும் கதை, மேலும் தகவல்கள் கிடைத்ததும் விவரங்கள் புதுப்பிக்கப்படும்)


Next Story