Top
undefined
Begin typing your search above and press return to search.

கொரோனா வைரஸ்: அடுத்த இரண்டரை மாதம் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் - Dr ஹர்ஷ் வர்தன்.!

கொரோனா வைரஸ்: அடுத்த இரண்டரை மாதம் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் - Dr ஹர்ஷ் வர்தன்.!

JananiBy : Janani

  |  17 Oct 2020 11:15 AM GMT

கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் பரவ தொடங்கிய கொரோனா தொற்றுநோய் உலகம் முழுவதும் பெரிய அழிவையே ஏற்படுத்தியது. கடந்த இரண்டு மாதங்களாக நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் அடுத்த மாதம் குளிர் காலம் தொடங்கவுள்ள நிலையில், வரவிருக்கும் இரண்டரை மாதமும் இந்த கொரோனா தொற்றுநோய் போராட்டத்தில் மிகவும் பாதுகாப்புடனும் எச்சரிக்கையுடனும் இருப்பது அவசியம் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் Dr ஹர்ஷ் வர்தன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

இந்த கொரோனா தொற்றுநோயால் பலரது உயிர்கள் இழந்துள்ள நிலையில், இந்த கொரோனா தொற்றுநோய் மேலும் பரவாமல் நிலைமையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வது ஒவ்வொரு மக்களின் கடைமை என்று Dr வர்தன் தெரிவித்தார்.

மேலும் கை மற்றும் சுவாசப்பாதைகளைத் தூய்மையாக வைப்பது மற்றும் பொது இடங்களில் முகக்கவசங்கள் அணிவது முக்கியம் என்று கூறினார். மேலும் தொற்றுநோய்க்கு எதிராக எடுக்கப்படும் சிறிய முன்னெச்சரிக்கைகளும் பெரிய அளவிலான தொற்றுநோய் பரவலைத் தடுக்கும் என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், கொரோனா தொற்றுநோய்க்கு எதிராக கண்டுபிடித்த மூன்று தடுப்பூசிகளும் சோதனையில் முன்னேறி வருகின்றது. அந்த தடுப்பூசிகளில் ஒன்று மருத்துவ பரிசோதனையில் மூன்றாவது நிலையில் உள்ளது. மற்ற இரண்டு தடுப்பூசிகளும் இரண்டாம்கட்ட சோதனையில் உள்ளது. விரைவில் கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி இந்தியாவில் விரைவில் கொண்டுவரப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Next Story