Top
undefined
Begin typing your search above and press return to search.

100நாள் வேலைத்திட்டத்திற்கு கூடுதலாக ரூ.40,000 கோடி - மீண்டும் தொடங்கியதில் ஊரக மக்கள் மகிழ்ச்சி!

100நாள் வேலைத்திட்டத்திற்கு கூடுதலாக ரூ.40,000 கோடி - மீண்டும் தொடங்கியதில் ஊரக மக்கள் மகிழ்ச்சி!

MuruganandhamBy : Muruganandham

  |  22 May 2020 12:19 PM GMT

கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலால் 25-3-2020 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கின் நான்காம் கட்டத்தில் நாம் இப்போது இருக்கிறோம். முதல் 2 கட்டங்களில் அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளும் முடங்கிப் போய் இருந்தன. 3வது ஊரடங்கில் சில தளர்வுகளும் 4வது ஊரடங்கில் பெருமளவில் தளர்வுகளும் அனுமதிக்கப்பட்டு உள்ளன.

எதிர்பாராத இந்த ஊரடங்கால் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். சுற்றி உள்ள சிறு நகரங்களுக்கு வேலைக்குச் செல்ல முடியவில்லை. உள்ளூரிலும் வேலை இல்லை. 100 வேலை என்று சொல்லப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் உறுதி திட்டமும் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நெருக்கடிகளால் வருவாய் ஏதும் இல்லாமல் கிராமத்தில் இருக்கும் ஏழை மக்கள் பரிதவித்து வந்தனர்.

மூன்றாம் ஊரடங்கின் பிற்பகுதியில்தான் இந்த 100 நாள் வேலைதிட்டத்தை தொடங்கலாம் என்று அரசாங்கம் அறிவித்தது. மேலும் 1-4-2020 முதல் 100 நாள் வேலைத்திட்டத்தில் கூலியானது 256 ரூபாயாக உயர்த்தப்பட்டது. பிறகு சுயசார்பு பாரதம் திட்டத்தின் கீழ் 100நாள் வேலைத்திட்டத்திற்கு கூடுதலாக ரூ.40,000 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. சொந்த ஊர்களுக்கு திரும்பி வந்த, வருகின்ற புலம் பெயர் தொழிலாளர்களுக்கும் 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை கொடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கிராமத்தில் இருப்பவர்கள் வருவாய் ஈட்டுவதற்காக இருக்கும் கிராமத்தை விட்டு இடம்பெயர்ந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இப்போது புலம் பெயர்ந்து சென்றவர்கள் திரும்பி வரும்போது அவர்களை அரவணைக்கவும் இத்திட்டம் தயாராக உள்ளது.

Next Story