Top
undefined
Begin typing your search above and press return to search.

ஊரடங்கிலும் பிரதமரின் உஜ்வலா திட்டத்தில் இலவசமாக 6.8 கோடி சிலிண்டா்கள் விநியோகம் - 2 மாதத்தில் எட்டப்பட்ட புதிய சாதனை இலக்கு..!

ஊரடங்கிலும் பிரதமரின் உஜ்வலா திட்டத்தில் இலவசமாக 6.8 கோடி சிலிண்டா்கள் விநியோகம் - 2 மாதத்தில் எட்டப்பட்ட புதிய சாதனை இலக்கு..!

MuruganandhamBy : Muruganandham

  |  22 May 2020 12:18 PM GMT

உஜ்வலா திட்ட பயனாளிகளுக்கு ஏப்ரல் மாதம் முதல் மே 20-ஆம் தேதி வரை 6.79 கோடி இலவச சமையல் எரிவாயு சிலிண்டா்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

கொரோனா பரவலை தடுக்க, பிறப்பித்த ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ, கடந்த மார்ச்சில், பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வு திட்டம் அறிவிக்கப்பட்டது.

பிரதமரின் ஏழைகள் நலத்திட்டத்தின் கீழ், ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை பிரதமரின் உஜ்வலா திட்டப் பயனாளிகள் 8 கோடி பேருக்கு 14.2 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டா்கள் இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதன்படி ஏப்ரல் முதல் மே 20-ஆம் தேதி வரை 6.79 கோடி இலவச சமையல் எரிவாயு சிலிண்டா்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இலவச காஸ் சிலிண்டர்களுக்கான தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் முன்னதாகவே வரவு வைக்கப்படுகிறது. இதனால், அத்தொகை மூலம், அவர்கள், அருகில் உள்ள எரிவாயு முகவர்களிடம், காஸ் சிலிண்டரை பெற்று வருவதாக, அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஏப்ரல் மாதத்தில், எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள் பிரதமர் உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு 453.02 லட்சம் உருளைகளை பிரதமர் ஏழைகள் மறுவாழ்வுத் தொகுப்பின் கீழ் விநியோகித்துள்ளன. 20.5.2020 வரை, எண்ணெய் நிறுவனங்கள் பிரதமர் உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு 679.92 லட்சம் உருளைகளை விநியோகித்துள்ளன. பயனாளிகளுக்கு அவர்களது வங்கிக்கணக்குகளில் நேரடிப் பயன் மாற்றம் மூலமாக முன்கூட்டியே பணம் செலுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் அவர்கள் இந்த வசதியைப் பெறுவதற்கு சிரமப்பட வேண்டியதிருக்காது.

சமையல் சிலிண்டர்களைப் பயனாளிகளுக்கு விநியோகம் செய்வதில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்கள் உரிய நேரத்தில் சிலிண்டர்களை விநியோகிப்பதுடன் பயனாளிகளிடையே பல்வேறு சுகாதார விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருவதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story