Top
undefined
Begin typing your search above and press return to search.

முறைகேடாக தமிழகத்தில் குடியேறிய 40 வங்கதேசத்தினரை, அவர்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்பிய தமிழக காவல்துறை!

முறைகேடாக தமிழகத்தில் குடியேறிய 40 வங்கதேசத்தினரை, அவர்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்பிய தமிழக காவல்துறை!

MuruganandhamBy : Muruganandham

  |  13 Feb 2020 2:21 AM GMT

முறையான ஆவணங்கள் எதுவும் இன்றி தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்ததாக வங்கதேசத்தைச் சேர்ந்த சுமார் 40 பேரை அவர்களது நாட்டுக்கே திருப்பி அனுப்பி வைத்துள்ளனர் தமிழக காவல்துறையினர். இதுதவிர போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல முயன்ற 2 வங்க தேசத்தினர் பிடிபட்டுள்ளனர்.

மத்திய உளவு பிரிவு, தமிழக கியூ பிரிவு உள்ளிட்ட புலனாய்வு பிரிவு காவல்துறையினர் சட்டவிரோத குடியேற்றம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், வங்கதேச நாட்டை சேர்ந்த சுமார் 40 பேர் தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கி பணி செய்து வந்தது தெரியவந்ததாகவும், அவர்கள் அடையாளம் காணப்பட்டு மீண்டும் அவர்களது நாட்டுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் மேலும் கூறும்போது,

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் வங்கதேசத்தில் இருந்து கொல்கத்தாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்தவர்கள், அங்குள்ளவர்கள் போல போலி ஆவணம் தயார் செய்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்குள் நுழைந்ததாகவும், அவர்களை சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பும் பணி நடந்து வருவதாகவும் தெரிவித்தனர். மேலும் இரு வங்கதேச நாட்டினர் போலி ஆவணம் தயார் செய்து புத்த துறவிகள் வேடத்தில் இலங்கை செல்ல இருந்த நிலையில், அவர்களும் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டுள்ளனர்.

Next Story