Top
undefined
Begin typing your search above and press return to search.

கொரோனா வைரஸ் தடுப்பதற்கு ₹9,000 கோடி ஒதுக்க! பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்!

கொரோனா வைரஸ் தடுப்பதற்கு ₹9,000 கோடி ஒதுக்க! பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்!

Vignesh KBy : Vignesh K

  |  28 March 2020 10:25 AM GMT

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு ₹9,000 கோடி நிதி தமிழ்நாட்டிற்கு ஒதுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதை பற்றி பிரதமருக்கு முதல்வர் எழுதிய கடிதத்தில்: கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகாக தமிழ்நாட்டிற்கு ₹9,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும். தடுப்பு பணி மற்றும் பாதிப்புகளை ஈடு செய்ய கூடுதலாக நிதி தேவைப்படுகிறது. மாநில அரசுக்கு வழக்கமாக வழங்கும் நிதி போல் இல்லாமல் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

இந்தியாவின் ஜிடிபி மற்றும் மாநிலத்தின் ஜிடிபி பங்களிப்பின் அடிப்படையில், நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மாநில அரசுகள் கூடுதல் கடன் உதவியாக ₹1 லட்சம் கோடி கடன் பெற அனுமதிக்க வேண்டும். இந்த கோரிக்கையை பிரதமர் மோடி பரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு முதல்வர் கடிதத்தில் எழுதியுள்ளார்.

Next Story