Top
undefined
Begin typing your search above and press return to search.

புல்வாமா நினைவு தினத்தை இழிவுபடுத்திய கம்யூனிஸ்ட் தலைவர்!

புல்வாமா நினைவு தினத்தை இழிவுபடுத்திய கம்யூனிஸ்ட் தலைவர்!

Kathir EditorBy : Kathir Editor

  |  14 Feb 2020 7:26 AM GMT

இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும், தேசபக்திக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை கம்யூனிஸ்ட் தலைவர்கள் அவ்வப்போது நிரூபித்து வருகின்றனர். கம்யூனிஸ்டுகளின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் இந்த நாட்டிற்கு விரோதமாகவே இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.

தேசத்தை இழிவுபடுத்துவது, பிரிவினையை தூண்டுவது, ராணுவ அமைப்பை அவமதிப்பது இதெல்லாம் கம்யூனிஸ்டுகளின் தொடர் கதைகள்.

கடந்த ஆண்டு இதே தினத்தில் புல்வாமாவில் 40 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். அதனை இன்று நாடே நினைவு படுத்தி சோகத்தைப் பகிர்ந்து வருகிறது. ஆனால் கம்யூனிஸ்டுகள் மட்டும் புல்வாமா நினைவு தினத்தை கேலி செய்து உள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பியுமான முகமது சலீம் இன்று ராணுவத்தையும், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் தியாகத்தையும் கொச்சைப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "ராணுவத்தின் திறமை இன்மையை நினைவு கூற தேவை இல்லை. 80 கிலோ ஆர்டிஎக்ஸ் சர்வதேச எல்லையில் ராணுவ பாதுகாப்பை தாண்டி எப்படிக் கொண்டு வந்தார்கள்?" என்று தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் புல்வாமா தாக்குதலுக்கு காரணமான முஸ்லிம் பயங்கரவாதிகளை பற்றி ஒரு வார்த்தைகூட குறிப்பிடவில்லை இந்த தேசவிரோத கம்யூனிஸ்ட் தலைவர் முகமது சலீம் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story