Top
undefined
Begin typing your search above and press return to search.

டெல்லி தேர்தலில் முஸ்லிம்கள் வாக்குப் பதிவு 93.75% : ஆனால் இந்துக்கள் வாக்குப் பதிவு என்ன தெரியுமா? இப்தார் கஞ்சி குடிக்க கட்சிகள் அலையும் காரணம் இதுதானாம்!

டெல்லி தேர்தலில் முஸ்லிம்கள் வாக்குப் பதிவு 93.75% : ஆனால் இந்துக்கள் வாக்குப் பதிவு என்ன தெரியுமா? இப்தார் கஞ்சி குடிக்க கட்சிகள் அலையும் காரணம் இதுதானாம்!

MuruganandhamBy : Muruganandham

  |  12 Feb 2020 1:40 PM GMT

டெல்லியில் நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று முடிந்து கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.

இந்த நிலையில் ஒரு தனியார் ஆராய்வு நிறுவனம் வாக்குப் பதிவுகள் குறித்த ஆய்வு பணியை செய்த போது கீழ் கண்ட விவரங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லி மாநிலத்தில் உள்ள மொத்த வாக்குகளில், 16 சதவீத வாக்குகள் முஸ்லிம் வாக்குகளாக உள்ளன. இந்த 16 சதவீத முஸ்லிம்களில் 15 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். அதாவது வாக்களித்த முஸ்லிம்கள் = 93.75% பேர்.

ஆனால் இந்துக்களின் மொத்த வாக்குகள் 84 சதவீதம். ஆனால் இந்துக்களில் 39 சதவீத இந்துக்கள் வாக்களிக்கவில்லை, அதாவது 45 சதவீத இந்துக்கள் மட்டுமே வாக்கு சாவடி சென்று வாக்களித்துள்ளனர்.

மொத்த வாக்குப் பதிவு சராசரியாக 60 . இதில் 25 சதவீத முஸ்லிம்கள் ஒட்டு மொத்தமாக திரண்டு ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்தவர்கள்.

மீதமுள்ள 45 முஸ்லிம் அல்லாத வாக்குகளில் 25 பேர் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர், அதாவது வாக்களித்த இந்துக்களில் 41.6% பேர் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். அதேபோல 17 சதவீத இந்துக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்துள்ளனர். இது இந்துக்களில் 28.3% வாக்குகள் ஆகும். 3 பேர் காங்கிரசுக்கு 5% வாக்களித்துள்ளனர்.

முடிவு:

வாக்களித்த இந்துக்கள் = 61%

ஆம் ஆத்மி வாக்குகள் = 25% + 28.3% = 53.33%

பாஜக வாக்குகள் = 41.66%

காங்கிரஸ் வாக்குகள் = 5%

அதாவது பாஜகவை தோற்கடிக்கக்கூடிய ஒரு கட்சிக்கு முஸ்லிம்கள் ஒருமனதாக வாக்களிக்கின்றனர். எனவே அவர்களின் வாக்களிப்பு சதவீதம் 25% ம் ஒட்டுமொத்தமாக பாஜக அல்லாத கட்சிக்கு கிடைத்து விடுகிறது.

மதசார்பற்ற கட்சிகள் என தன்னைக் கூறிக் கொள்ளும் ஊழல் கட்சிகள் ஏன் ரம்ஜான் கஞ்சியைக் குடிக்க அலைகின்றன, இப்தார் விருந்துக்கு அலைகின்றன என்பதற்கு இது தான் காரணம்.

முஸ்லீம் வாக்குகளை ஒன்றிணைப்பதிலும், இந்து வாக்குகளைப் பிரிப்பதிலும் ஏன் திமுக, ஆம் ஆத்மி, காங்கிரஸ், இடது சாரிகள் மற்றும் இதர கட்சிகள் அலைகிறார்கள் என்பதற்கு இந்த பகுப்பாய்வு உதவும்.

Next Story