Top
undefined
Begin typing your search above and press return to search.

மலிவு விலையில் மருந்து எளிதில் கிடைக்க 2024க்குள் 10,500 ஜன அவுஷதி கேந்த்ரா மருந்துக் கடைகள் திறக்க மத்திய அரசு முடிவு.!

மலிவு விலையில் மருந்து எளிதில் கிடைக்க 2024க்குள் 10,500 ஜன அவுஷதி கேந்த்ரா மருந்துக் கடைகள் திறக்க மத்திய அரசு முடிவு.!

Saffron MomBy : Saffron Mom

  |  19 Sep 2020 1:51 AM GMT

நடுத்தர மக்களுக்கு, குறிப்பாக ஏழை மக்களுக்கு மலிவு விலையில் தரமான மருந்துகளை வழங்குவதற்கான தொலைநோக்குடன் பிரதான் மந்திரி பாரதிய ஜன் அவுஷதி கேத்திரியங்களின் (PMBJP) எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது என்று மத்திய ரசாயனம் மற்றும் உரங்களுக்கான அமைச்சர் சந்தான கவுடா தெரிவித்துள்ளார்.இந்த அமைச்சகத்தின் மூலம் 2024 இறுதியில் 10,500 ஜன அவுஷதி கடைகள் ஆக அதிகப்படுத்தும் என்றும் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. மேலும் தற்போது இந்திய நாட்டில் 6,603 கடைகள் உள்ளன.

மார்ச் 2020 நாளுக்குள் 3,940 புதிய கடைகள் கூடுதலாக நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்க உள்ளதாகவும், இந்த அமைச்சகம் நேற்றைய அறிக்கையில் கூறியுள்ளது. ஜன அவுஷதி வலையமைப்பின் விரிவாக்கம் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகளை எளிதில் சென்றடைவதை உறுதி செய்யும் என இந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரன வைரஸ் நோய் தொற்று காரணமாக இந்த அமைச்சகம், விநியோகிக்கும் பொருட்கள் மற்றும் பிற மூலப்பொருட்களை ஏழை எளிய மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் பல சவால்களை எதிர்கொண்டதையும் இந்த அமைச்சகம் கூறியுள்ளது. இதுதவிர போக்குவரத்தை பிரச்சினை காரணமாகவும் பிராந்திய கிடங்குகளில் இருந்து மருந்துகளை அதன் சில்லறை கடைகளுக்கு வழங்குவதிலும் பல இடையூறுகளை சந்தித்து உள்ளது.

இந்த விஷயத்தை கருத்தில் கொண்டு இந்த புதிய விரிவாக்கத் திட்டத்தை அனைத்து விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும் நேரத்தை மற்றும் விநியோகத்தையும் உறுதி செய்வதற்காக பயன்பட்டு வந்த பழைய தொழில்நுட்பம் நீக்கப்பட்டு, பயனுள்ள புதிய தகவல் தொழில்நுட்பம் செயல்படும் என்று இந்த அறிக்கையில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 4 கிடங்குகள் குருகிராம், சென்னை, பெங்களூரு மற்றும் குஜராத்தில் செயல்படுகின்றன. மேலும் இந்த கிடங்குகள் மேற்கு மற்றும் மத்திய இந்தியாவின் மேலும் இரண்டு இடங்களையும் திறக்க இந்த அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. கூடுதலாக வழிமுறையை பலப்படுத்த மாநில வினியோகஸ்தர்கள் நியமிக்க உள்ளதாக, இந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

PMBJP திட்டம் தரமான மருந்துகளை மிகக் குறைந்த விலையில், மக்கள் தொகையில் பெரும் பகுதியினருக்கு குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு கிடைக்கச் செய்வதே இதனுடைய முக்கிய நோக்கம்.

Next Story