Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்திய ரயில்வேயை நூறு சதவீதம் மின்மயமாக்கலுக்கு பிரதமர் மோடி ஒப்புதல் - உலகின் முதல் நூறு சதவித பசுமை வழித்தட ரயில்வேயாக மாற்ற திட்டம்!

இந்திய ரயில்வேயை நூறு சதவீதம் மின்மயமாக்கலுக்கு பிரதமர் மோடி ஒப்புதல் - உலகின் முதல் நூறு சதவித பசுமை வழித்தட ரயில்வேயாக மாற்ற திட்டம்!

MuruganandhamBy : Muruganandham

  |  12 July 2020 2:18 PM GMT

இந்திய ரயில்வேயை நூறு சதவீதம் மின்மயமாக்கலுக்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார் என மத்திய ரயில்வே துறைஅமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்து உள்ளார்.

2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து ரயில் பாதைகளையும் மின்மயமாக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இந்திய ரயில்வேயில் 67 ஆயிரத்து 368 கிலோமீட்டர் தொலைவுக்கு ரயில்பாதை உள்ளது. இவற்றில் 38 ஆயிரத்து 558 கிலோமீட்டர் தொலைவுக்கு மின்மயமாக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 28 ஆயிரத்து 810 கிலோமீட்டர் தொலைவையும் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் மின்மயமாக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி 2019 - 2020 ஆண்டில் ஆறாயிரம் கிலோமீட்டர் மின்மயமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

2020-2021 ஆண்டில் ஆறாயிரம் கிலோமீட்டரும், 2021 - 2022 ஆண்டில் ஆறாயிரம் கிலோமீட்டரும் ரயில்பாதைகள் மின்மயமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

2022 - 2023 ஆண்டில் ஆறாயிரத்து 500 கிலோமீட்டர் ரயில்பாதை மின்மயமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எஞ்சிய நாலாயிரத்து 310 கிலோமீட்டர் தொலைவை 2023ஆம் ஆண்டு டிசம்பருக்குள் மின்மயமாக்க இலக்கு குறிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய குளோபல் வீக் நிகழ்ச்சியில் வீடியோ கன்பிரன்சிங் வாயிலாக பங்கேற்ற மத்திய ரயில்வே துறைஅமைச்சர் பியூஷ் கோயல், நாட்டில் உள்ள சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமான இருப்பு பாதைகளை, முழுமையாக மின்மயமாக்கி, உலகின் முதல் நூறு சதவித பசுமை வழித்தட ரயில்வேயாக மாற்ற விரும்புவதாக குறிப்பிட்டு உள்ளார்.

கொரோனா பாதிப்பு குறித்து பேசிய பியூஷ் கோயல், வரலாற்று ரீதியாக இந்தியா பல்வேறு சவால்களை சந்தித்து உள்ளதால், கொரோனாவால் தற்போது நிலவும் சூழலில் இருந்து இந்தியா மீண்டு வருவதற்கான தெளிவான அறிகுறிகள் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

Next Story