Top
Kathir News
Begin typing your search above and press return to search.

வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த சர்வதேச நாணய நிதியம் (IMF).!

வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த சர்வதேச நாணய நிதியம் (IMF).!

வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த சர்வதேச நாணய நிதியம் (IMF).!

By : Saffron Mom

  |  16 Jan 2021 12:42 PM GMT

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தகவல் தொடர்பு இயக்குனர் ஜெர்ரி ரைஸ் கடந்த வியாழக்கிழமை அன்று அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசினார். அவர் இந்தியாவைக் குறித்து பேசுகையில், இந்தியாவில் சமீபத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட வேளாண் மசோதாக்கள், இந்தியாவில் விவசாய சீர்திருத்தங்களுக்கான ஒரு குறிப்பிடத்தக்கபடியாகும் என்றும் அதற்கான ஆற்றல் அதற்கு உள்ளது என்று தாங்கள் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

புதிய வேளாண் சட்டத்தின் விதிமுறைகள் இடைத்தரகர்களின் பங்கை குறித்து விவசாயிகளின் செயல்திறனை அதிகரிக்கும் என்றும் கூறினார். இந்த நடவடிக்கைகள், விவசாயிகளுடன் நேரடியாக விற்பனையாளர்கள் ஒப்பந்தம் செய்யவும், இடைத்தரகர்களின் பங்கைக் குறைக்கவும்,செயல்திறனை மேம்படுத்தி கிராமப்புற வளர்ச்சியை ஆதரித்து, விவசாயிகளுக்கு தங்கள் வேளாண் விளைபொருளின் உபரியின் பெரும்பகுதியை தக்க வைத்துக் கொள்ளவும் உதவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் புதிய செயல் முறைக்கு விவசாயிகள் மாறும்பொழுது, பாதிக்கப்படுபவர்களுக்கு பாதுகாப்பு வலை இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை சந்தையில் இடம் அளிப்பதை உறுதி செய்வதன் மூலம் இந்த பாதிப்பை சரி செய்ய முடியும் என்றார்.

நிச்சயமாக இந்த சீர்திருத்தங்களின் செயல்முறை, அதை செயல்படுத்தப்படும் செயல்திறன் மற்றும் அவை அறிமுகப்படுத்தப்படும் நேரத்தை பொறுத்து இது பயனளிக்கும். எனவே சீர்திருத்தங்களுடன் சேர்த்து, எப்படி இது நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்த விவசாய சீர்திருத்தங்கள் கடந்த 20 முதல் 30 ஆண்டுகளாக பல்வேறு விவசாய சங்கங்களின் கோரிக்கையாகும். பல்வேறு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் உறுதி மொழியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story