Top
undefined
Begin typing your search above and press return to search.

டெல்லி: PMOவின் ஆலோசகர் எனக் கூறிக் கொண்டு மோசடி செய்து வந்த JNU மாணவர் கைது.!

டெல்லி: PMOவின் ஆலோசகர் எனக் கூறிக் கொண்டு மோசடி செய்து வந்த JNU மாணவர் கைது.!

Saffron MomBy : Saffron Mom

  |  18 Oct 2020 2:00 AM GMT

பிரதம மந்திரி அலுவலகத்தின் (PMO) ஆலோசகர் என்று தன்னைக் கூறிக் கொண்டு பலவிதமான மோசடிகளில் ஈடுபட்டு வந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (JNU) மாணவர் அங்கிட் டேவை டெல்லி போலீஸார் வெள்ளிக்கிழமை அன்று கைது செய்துள்ளனர். இவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் MA பயின்று வருகிறார்.


தன்னை ஒரு நிபுணத்துவம் மிகுந்த ஆலோசகராகக் காட்டிக் கொண்டு, விவரம் தெரியாத நபர்களையும் அமைப்புகளையும் ஏமாற்றி மோசடி செய்து வந்துள்ளதாக டெல்லி காவல்துறை கூறியுள்ளது.

சவூதி அரேபியாவிற்கு முகக் கவசங்களின் ஏற்றுமதியை உறுதி செய்வதற்காக போலியான நோட்டிபிகேஷன் களையும் சமர்ப்பித்திருந்தார். அவற்றை ஏற்றுமதி செய்ய இந்திராகாந்தி விமான நிலையத்தில் அனுமதி பெற்றுத் தருவதாக கூறி ஒரு நிறுவனத்திடமிருந்து 7 லட்சத்தை மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

அவர் யார் என்பது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கேட்ட போது, பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் ஆலோசகர் என்று கூறினார். இருப்பினும் அதிகாரிகள் விரிவான ஒரு விசாரணை நடத்தியபோது அந்த நபர் ஒரு மோசடிக்காரன் என்பது தெரியவந்தது. இந்த மோசடி குறித்து விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக IGI விமான நிலைய காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பிறகு டே இன்று கைது செய்யப்பட்டார்.

அந்த நபரிடம் இருந்து பிரதமர் அலுவலகத்தின் போலி ஐடி மற்றும் விசிட்டிங் கார்டை போலீசார் மீட்டுள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர் ஏற்கனவே பல மோசடிகளில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே ஒருமுறை அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். ஏற்றுமதி என்ற பெயரில் அவர் எத்தனை பேரை ஏமாற்றி இருக்கிறார் என்பது குறித்து அறிந்து கொள்வதற்காக போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

ரூபாய் 2 கோடி மதிப்புள்ள முககவசங்களை அனுப்புவதாக ஒரு தொழிலதிபரையும் அவர் ஏமாற்றி விட்டதாக கூறப்படுகிறது. அமர் உஜாலா பத்திரிகையில் வெளியிட்டுள்ள செய்தியின்படி, கடந்த செப்டம்பர் மாதத்தில் இவர் மீது ஒரு FIR பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஊரடங்கின் போது, ஒரு துணி தொழிற்சாலை வைத்து இருந்த அனுஜ் ஜெயின் முகக் கவசங்கள் தயாரிக்க ஆரம்பித்தார்.அவரை சந்தித்த அன்கிட், இந்த முக கவசங்களை சவுதி அரேபியாவிற்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வாங்கி தருவதாகக் கூறி 5 லட்சத்தை முன்பணமாக பெற்றுக்கொண்டு ஒரு போலியான அனுமதி கடிதத்தை உருவாக்கியிருக்கிறார். விசாரணையின் போது அந்த கடிதம் போலி என கண்டறியப்பட்டது. அவர்மீது காசிப்பூர் காவல் நிலையத்தில் ஏமாற்றியதாக புகார் பதிவு செய்தார் அனுஜ். இப்பொழுது அங்கிட் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

அங்கிட் ஏற்கனவே நொய்டாவில் உள்ள அமித் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். "The Three Tales" என்ற ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார் அவர் ஒரு "சைபர் நிபுணர்" என்று கூறிக்கொள்கிறார்.

தன்னை PMO வின் இளைஞர் ஆலோசகராக காட்டிக்கொண்டு சமூக ஊடகங்களில் மக்களை அச்சுறுத்துவது வழக்கமாக வைத்திருக்கிறார். அவர் ஊரடங்கின் போது ஒரு விஐபி பாசை பெற்றிருக்கிறார். அனுஜ்கும் ஒரு விஐபி பாஸ் வாங்கி கொடுத்திருக்கிறார். போலிஸ் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Next Story