Top
undefined
Begin typing your search above and press return to search.

அயோத்தியில் ராமர் கோவில்: இந்துக்களிடையே பிரிவினையை உருவாக்க முயற்சிக்கும் விஷமிகள்.! பலிக்காது.!

அயோத்தியில் ராமர் கோவில்: இந்துக்களிடையே பிரிவினையை உருவாக்க முயற்சிக்கும் விஷமிகள்.! பலிக்காது.!

Saffron MomBy : Saffron Mom

  |  9 Aug 2020 1:46 PM GMT

ஆகஸ்ட் 5ம் தேதி அயோத்தி நகரில், ராமஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டுவதற்காக நடந்த பூமி பூஜை நிகழ்வு உலகம் முழுவதும் உள்ள இந்துக்களுக்கு ஒரு முக்கியமான தருணமாக அமைந்தது. அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டும் பல கால கனவை நனவாக்க தொடங்கிய தருணம் அது. பூமி பூஜை விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு 500 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு கோவில் கட்ட அடிக்கல் நாட்டினார். ஒரு காலத்தில் ராமபிரான் வாழ்ந்தாரா என கேள்வி கேட்ட காங்கிரஸ் கட்சி உட்பட பல அரசியல் கட்சிகள் கோவில் கட்டுவதற்கு தங்கள் ஆதரவை பகிரங்கமாக தெரிவித்தன.

இப்படி அனைத்து தரப்பிலிருந்தும் கோவில் கட்டுவதற்காக வரும் ஆதரவுகள் சிலரை எரிச்சலூட்டியது. அவர்களில் ஒரு பிரிவினர் தங்களை 'தாராளவாதிகள்' என்று அழைத்துக்கொள்ளும் குறுகிய மனப்பான்மை கொண்ட ஹிந்து மத வெறுப்பாளர்கள். ராமருக்கு கோவில் கட்டுவது அவர்களை அதிகமாக கோபப்படுத்தியது. ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த செயலை செய்கிறார்கள் என்பதை குறை மதிப்பிற்கு உட்படுத்த இந்தக் கோவில் கட்டுமானத்தில் மேல் ஜாதி, கீழ் ஜாதி என இந்துக்களை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட தொடங்கினர்.அதில் பேராசிரியர் லட்சுமணன் யாதவ் என்ற ஒருவர் கூறும் வீடியோ வைரலாகி வந்தது. அதில் அவர், "மேல் ஜாதி மூளை என்ன செய்யும் தெரியுமா? தங்களது குழந்தைகளை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி, தனியார் கம்பெனிகளில் நிறைய சம்பளம் வாங்கிக் கொடுக்கும். ஆனால் அது உங்கள் குழந்தைகளை மதம் ஆபத்தில் இருக்கிறது என்று கூறி போராடத் தூண்டும்." என்றார் யாதவ். மேலும் கூறுகையில், "ராமஜென்ம பூமி இயக்கமே தலித்துகளின் இரத்தத்தினால் நிரம்பியது. பழங்குடி மக்களும் தலித்துகளும் இதற்கான கஷ்டமான வேலைகளை செய்ய வேண்டியதாயிருந்தது" என்றும் கூறினார். "அத்வானி எங்கெல்லாம் சென்றாரோ அங்கெல்லாம் ரத்தமும் அழிவும் சென்றன. அவர் குஜராத் கலவரங்களோடும் தொடர்புடையவர். இத்தகைய கலவரங்களில் எல்லாம் வன்முறைகளுக்கு முன்னணியில் நின்றது யார்? தலித்துகள், பழங்குடி மக்கள் இவர்கள்தான். கொலைகளை செய்தது, கலவரம் செய்தது, வன்முறையை தூண்டியது இவர்கள் தான்" என்று யாதவ் கூறினார். "இத்தகைய தலித்துகள் பழங்குடி மக்கள் கீழ்ஜாதி மக்கள் கொலைகளை புரிந்து ராமஜென்ம பூமி இயக்கத்தை முன்னின்று நடத்தி நடத்தினர். ஆனால் அவர்கள் கோவில் பூசாரிகளாக ஆக்கப்பட மாட்டார்கள் அவர்கள் கோவில் அறக்கட்டளையில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை" என்று கூறினார். மேலும் யாதவின் கருத்துப்படி தலித்துகள் பழங்குடி மக்கள் மற்றும் ஓபிசிக்கள் மேல்சாதி இந்துக்களால் ராமர் கோவில் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டதாகவும் இப்போது அது நடக்கப் போகும் தருணத்தில் அவர்களை ஒதுக்கி வைத்து விட்டதாகவும் கூறினார்.

ஆனால் உண்மையில் யாதவ் கூறுவதற்கும் உண்மை நிலைக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் கிடையாது. ஹிந்துக்களை பிரிப்பதற்காக இப்படியெல்லாம் கட்டுக்கதைகளைகூறி வரும் யாதவ், கோவில் கட்டும் அறக்கட்டளையில் இந்த இவர்களுக்கு இடம் இல்லை என்று கூறுவது ஒரு மிகப்பெரிய பொய். அதை நாம் உடைக்கலாம்.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் பிரதமர் மோடி ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளை நிர்மாணிக்க முடிவு செய்தபிறகு உள்துறை அமைச்சர் அமித் ஷா "ராம ஜென்மபூமி தீர்த்த ட்ரஸ்ட்" என்ற அறக்கட்டளையை உருவாக்கி அதில் 15 பேரை நியமித்தார். அதில் ஒருவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். காமேஸ்வர பால் என்ற ஒரு தலித் இந்த அறக்கட்டளையில் இணைந்து ராமர் கோவில் கட்டும் பணிகளை மேற்பார்வையிடுவார். தலித் தலைவரான காமேஸ்வர பால் தான் ராமர் கோவிலில் 1989ல் முதல் செங்கல் எடுத்து வைத்து ஹான் இவர் அடிக்கல் நாட்டினார். இந்த ஏற்பாடு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினால் செய்யப்பட்டது.
இரண்டாவது, ராமர் கோவிலுக்கு பூமி பூஜை நடத்தி முடிக்கப்பட்ட பின் பிரசாதத்தட்டு கொடுக்கப்பட்டு முதன்முதலில் ஒரு தலித் குடும்பத்திற்கு தான் அனுப்பி வைக்கப்பட்டது. அயோத்தியில் வசிக்கும் மஹாவீர் குடும்பத்திற்கு அளிக்கப்பட்டது. மகாவீர் ஒரு தச்சர். 2019 லோக்சபா தேர்தலின் பொழுது அவர் வீட்டிற்கு யோகி ஆதித்யநாத் சென்றுள்ளார்.

விஷ்வ ஹிந்து பரிஷத், தலித் கோவில்களிடமிருந்து புனித மண்ணை சேகரித்து ராமர் கோவில் கட்டுவதற்காக ஆகஸ்ட் 5ஆம் தேதி அனுப்பி வைத்தது. காசியிலுள்ள துறவி ரவிதாஸ் கோவில் மகரிஷி வால்மீகி ஆசிரமம், வால்மீகி ஆசிரமம், தண்டய பில் டெம்பிள் ஆகிய இடங்களிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் பி ஆர் அம்பேத்கர் பிறந்த இடத்திலிருந்தும் புனித மண் எடுத்து அனுப்பி வைக்கப்பட்டது மேலும் அவர் புத்த மதத்திற்கு மதம் மாறிய வால்மீகி கோவிலில் இருந்து மண் அனுப்பிவைக்கப்பட்டது.

மேலும் அயோத்தியாவில் அனைத்து பயிற்சி பெறும் பூசாரிகளுக்காக ஒரு மையத்தை உருவாக்க ஆர்எஸ்எஸ் முடிவு செய்திருக்கிறது. மேலும் ராம் மந்திர் இயக்கத்திற்கு முன்னணியில் நின்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரிவை சேர்ந்தவர்கள் கல்யாண்சிங், உமாபாரதி, வினய் கால்டியர், சாத்வி ரிதம்பரா ஆகியோர் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற 'தாழ்த்தப்பட்ட' ஹிந்துக்களுக்கும் எந்தவித பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வில்லை என்ற பொய்யான குற்றச் சாட்டுக்கு மாறாக இந்த வருடம் 32 வயது கண்ஹைய கிரி என்ற ஒரு தலித் ஜுனா ஹாராவின் ஒரு தலைவராக ஆக்கப்பட்டு உள்ளார். அரசியல் கட்சிகள் ராமர் கோவில் கட்டுவதற்கு விழுந்தடித்துக் கொண்டு ஆதரவு தரும் வேளையில் இந்த 'தாராளவாதிகள்' இத்தகைய விளைவுகளைக் கண்டு பயந்துபோய் ஜாதி பிரச்சினையை உருவாக்கி இந்துக்களின் ஒற்றுமையை குலைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

Next Story