Top
undefined
Begin typing your search above and press return to search.

அசாமில் மதரசா பள்ளிகளுக்கு மூடுவிழா! பாஜக அரசு அதிரடி!

அசாமில் மதரசா பள்ளிகளுக்கு மூடுவிழா! பாஜக அரசு அதிரடி!

Kathir EditorBy : Kathir Editor

  |  13 Feb 2020 12:03 PM GMT

அசாம் மாநிலத்தில் 1200 மதரசா பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் அரசாங்க செலவில் நடத்தப்படுகின்ற அரசுப்பள்ளிகள் ஆகும். ஆனால் முஸ்லிம் மதம் சார்ந்த பள்ளிகளாக இவை நடத்தப்பட்டு வருகின்றன. அதேவேளை அரசாங்கத்தின் எந்த வித கட்டுப்பாடும் இந்த மதரஸா பள்ளிகளுக்கு கிடையாது.

இதனால் அசாமில் உள்ள 2000 மதரசா பள்ளிகளை இதுவரை மதரசா பள்ளிகளாக இயங்கிவந்தவை, இனிமேல் அனைத்து மாணவர்களும் பயிலும் அரசு பள்ளிகளாக இயங்கும்.


இதுதொடர்பாக அசாம் மாநில கல்வி அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறுகையில்,"மதம் சம்பந்தப்பட்டவைகளை சொல்லிக் கொடுப்பது அரசின் வேலை அல்ல. மதரீதியாக பயிற்றுவிக்கும் மதரசா போன்ற பள்ளிகளுக்கு இனிமேல் அரசு நிதி வழங்காது. தங்களின் சொந்த செலவில் மதரசா பள்ளிகளை அவர்கள் நடத்திக்கொள்ளலாம். இதேபோல 200 சமஸ்கிருத பள்ளிகளும் அரசு பள்ளிகளாக்கப்படுகிறது." என்றார்.

Next Story