Top
undefined
Begin typing your search above and press return to search.

மஹாராஷ்ட்ரா: சிவசேனா குண்டர்களால் தாக்கப்பட்ட முன்னாள் கடற்படை வீரர் இன்று பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ்ஸில் இணைந்தார்.!

மஹாராஷ்ட்ரா: சிவசேனா குண்டர்களால் தாக்கப்பட்ட முன்னாள் கடற்படை வீரர் இன்று பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ்ஸில் இணைந்தார்.!

Saffron MomBy : Saffron Mom

  |  15 Sep 2020 11:46 AM GMT

உத்தவ் தாக்கரேவை கேலி செய்யும் ஒரு கார்ட்டூனை வாட்ஸ்அப் ஊடகத்தில் பார்வர்ட் செய்ததற்காக ஒரு முன்னாள் கப்பல்படை வீரரை சிவசேனாவை சேர்ந்த அடியாட்கள் சில நாட்களுக்கு முன்பு தாக்கி காயப்படுத்தியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த முன்னாள் வீரரின் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு சிவசேனாவை சேர்ந்த தலைவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு ஒரு மணி நேரத்தில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக, அந்த கப்பல் படை வீரர் மதன் ஷர்மா என்று அடையாளம் காணப்பட்டார்.

சிவசேனா குண்டர்களால் தாக்கப்பட்ட சில நாட்களுக்கு பின்னர், ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி மதன் சர்மா இன்று (செவ்வாய்க்கிழமை) மகாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்தார்.

சந்திப்பைத் தொடர்ந்து, சர்மா ஊடகங்களிடம் உரையாற்றினார், "நான் இப்போது பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் உடன் இணைந்துள்ளேன். மகாராஷ்டிராவில் எந்த குண்டர்கள் ஆட்சியையும் நடக்க விடமாட்டோம். சட்டம் ஏன் இரண்டு வெவ்வேறு வழிகளில் இருக்கிறது? யாராவது ஒரு அரசியல்வாதியுடன் இணைந்திருந்தால், ஒரு சாதாரண மனிதருடன் ஒப்பிடும்போது வித்தியாசமாக நடத்தப்படுவாரா? " எனக் கேள்வி எழுப்பினார்.

அவர் மேலும் கூறுகையில், "நான் தாக்கப்பட்டபோது, ​​நான் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் உடன் இருக்கிறேன் என்ற குற்றச்சாட்டை அவர்கள் சுமத்தினர். எனவே இன்று முதல் நான் பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் உடன் இருக்கிறேன் என்று அறிவிக்கிறேன்." என்றார்.



குற்றம் சாட்டப்பட்ட சிவ சேனா தொண்டர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் 'பலவீனமான தன்மை' குறித்து ஆளுநரிடம் தெரிவித்ததாக கூறினார். "எனது FIR குறித்து நடவடிக்கை எடுப்பேன் என்று ஆளுநர் எனக்கு உறுதியளித்தார். மாநில அரசு பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று நான் கோரினேன், ஜனாதிபதி ஆட்சி விதிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுடன் பேசுவதாக என்று அவர் உறுதியளித்தார், " என்று சர்மா தெரிவித்தார்.

மகாராஷ்டிராவின் புனேவும் மும்பையும் கொரானா வைரஸ் தாக்குதலில் பலத்த சேதத்திற்கு உள்ளாகி இருக்கும் நிலையில், அரசாங்கம் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டு வருவது சமூக வலைத்தளங்களில் பலரையும் கொந்தளிக்க வைத்துள்ளது. பலரும் மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கூட கூறி வருகின்றனர். இதற்கு சற்று முன்பாக தான் மேற்கு வங்காளத்தில் ஒருவர் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் பற்றிய அவதூறு செய்தார் என்று போலீசார் மும்பையிலிருந்து கொல்கத்தாவிற்கு சென்ற அவரை கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Next Story