Top
undefined
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் அரசு நீட் பயிற்சி மையத்தில் பயின்ற 1,615 மாணவர்கள் தகுதி.!

தமிழகத்தில் அரசு நீட் பயிற்சி மையத்தில் பயின்ற 1,615 மாணவர்கள் தகுதி.!

MuruganandhamBy : Muruganandham

  |  17 Oct 2020 12:47 PM GMT

நீட் தேர்வில் தமிழகத்தில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 57.44சதவிகிதமாக உள்ளது. கடந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழக மாணவர்களில் 48.57% பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 99,610 பேரில் 57,25 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் தேர்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 8.87% அதிகமாகும்.

இதில் தமிழக அரசின் நீட் பயிற்சி மையங்களில் பயின்றி 1,615 அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தகுதி பெற்றுள்ளனர். அரசு நீட் பயிற்சி மையத்தில் பயின்று தகுதி பெற்றவர்களில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 10 சதவீதம் மாணவர்கள் கூடுதலாக தகுதி பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.


அரசு நடத்திய நீட் பயிற்சி மையத்தில் பயின்ற 6,692 அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வை எழுதியிருந்தனர். இவர்களில் 1,615 பேர் தேகுதி பெற்றுள்ளனர். இவர்களில் அதிகபட்சமாக கோவை மாவட்டத்தை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி வாசுகி 580 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும் 4 மாணவர்கள் 500க்கு மேல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். 15 மாணவர்கள் 400 முதல் 500 வரை மதிப்பெண் பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தமிழ் வழியில் தேர்வெழுத பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகமாக இருந்தது. கடந்த ஆண்டு, 1,071 மாணவர்கள் தேர்வெழுத பதிவு செய்த நிலையில், இந்த ஆண்டு 17,101 மாணவர்கள் தேர்வெழுதினர். இந்த ஆண்டு முதல், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் ஜிப்மரில் சேருவதற்கும் நீட் அவசியமாகும்.

Next Story