Top
undefined
Begin typing your search above and press return to search.

பிரதான் மந்திரி முத்ரா யோஜனாவின் கீழ் பெண் பயனாளிகளுக்கு 4.78 லட்சம் கோடி ரூபாய் கடன் - வளர்ச்சி காணும் சிறு, குறு தொழில்கள்!

பிரதான் மந்திரி முத்ரா யோஜனாவின் கீழ் பெண் பயனாளிகளுக்கு  4.78 லட்சம் கோடி ரூபாய் கடன் - வளர்ச்சி காணும் சிறு, குறு தொழில்கள்!

MuruganandhamBy : Muruganandham

  |  13 Feb 2020 4:47 AM GMT

பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சர் அனுராக் தாக்கூர், பிரதான் மந்திரி முத்ரா யோஜனாவின் கீழ் பெண் பயனாளிகளுக்கு 4.78 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தவிர, "PMMY திட்டத்தின் கீழ், உற்பத்தி, பதப்படுத்துதல், வர்த்தகம், சேவைகள் மற்றும் விவசாயத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கு தகுதியான பயனாளிகளுக்கு கடன்கள் வழங்கப்படுகின்றன, அவை வருமானம் ஈட்டுவதற்கும் வேலைவாய்ப்பிற்கும் உதவுகின்றன.

அதிக முத்ரா கடன்கள் விநியோகிக்கப்பட்ட மூன்று முக்கிய மாநிலங்களில் 58,227.47 கோடி மதிப்புள்ள முத்ரா கடனுடன் தமிழ்நாடு முதலிடத்திலும், மேற்கு வங்கம் 55,232.19 கோடியுடன் இரண்டாம் இடத்திலும், கர்நாடகா முறையே 47,714.04 கோடியுடன் மூன்றாம் இடத்திலும் இருக்கிறது..

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் (PMMY). இது குறுந்தொழில் மேம்பாட்டு மற்றும் மறுநிதி நிறுவனம் Micro Units Development and Refinance Agency (MUDRA) மூலமாக செயல்படுத்தபடுகிறது. முத்ரா வங்கி என்பது ஒரு தனிப்பட்ட வங்கி அல்ல. இது ஒரு அரசின் திட்டமாகும், இது அனைத்து வங்கிகளின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

இது முற்றிலும் குறுந்தொழில் மேம்பாட்டிற்காக இந்திய அரசால் நிறுவப்பட்ட ஒரு புதிய திட்டமாகும். நிதி அமைச்சர் 2015-16 நிதியாண்டில் வெளியிட்டார். தனியார் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான நிதியினை வழங்குவது இதன் முக்கிய பணியாகும்.

Next Story