Top
undefined
Begin typing your search above and press return to search.

130 கோடி இந்தியர்களில் 2200 பேர் மட்டுமே ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் உள்ளதாக கணக்கு காட்டி உள்ளனர் - பிரதமர் மோடி!

130 கோடி இந்தியர்களில் 2200 பேர் மட்டுமே ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் உள்ளதாக கணக்கு காட்டி உள்ளனர் - பிரதமர் மோடி!

MuruganandhamBy : Muruganandham

  |  13 Feb 2020 7:57 AM GMT

இந்தியா போன்ற வளரும் பொருளாதாரத்தை கொண்ட நாடுகளுக்கு பல்வேறு சவால்கள் உள்ளன. நாட்டின் வரி விதிப்பு முறையில் சீர்திருத்தம் மேற்கொள்வதற்கு முந்தைய அரசுகள் தயங்கின. ஆனால் வரி விதிப்பு முறையை மக்களை மையப்படுத்தியதாக மாற்றியது பா.ஜ.க அரசுதான் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் பேசிய அவர், வரி விதிப்புக்கு உட்பட்ட பலர் வரி செலுத்துவதை தவிர்க்க பல்வேறு வழிகளை கையாள்கின்றனர். இதனால் நேர்மையாக வரி செலுத்துவோரின் மீதான சுமை அதிகரிக்கிறது.

நாட்டில் 130 கோடி இந்தியர்களில் 2200 பேர் மட்டுமே தங்களது ஆண்டு வருமானம் ரூ.1 கோடிக்கு மேல் உள்ளதாக கணக்கு காட்டி உள்ளனர். வெளிநாடு சென்று திரும்பும் இந்தியர்கள் 3 கோடி பேரில் 1½ கோடி பேர் மட்டுமே வரி செலுத்துகிறார்கள்.

எனவே வரி விதிப்புக்கு உட்பட்ட அனைத்து குடிமக்களும் நாட்டின் வளர்ச்சிக்காக வரி செலுத்த முன்வர வேண்டும். வரி செலுத்துவோரின் உரிமைகளை மதிக்கிறோம். வரி செலுத்துபவர்கள் எந்தவித துன்புறுத்தலுக்கும் ஆளாக மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

Next Story