Top
undefined
Begin typing your search above and press return to search.

"பிரதமருக்கு எப்படி இவ்வளவு ஆதரவு?" தன் சொந்த சேனலின் கணக்கெடுப்பையே நம்ப மறுக்கும் ராஜ்தீப் சர்தேசாய்.!

பிரதமருக்கு எப்படி இவ்வளவு ஆதரவு? தன் சொந்த சேனலின் கணக்கெடுப்பையே நம்ப மறுக்கும் ராஜ்தீப் சர்தேசாய்.!

Saffron MomBy : Saffron Mom

  |  9 Aug 2020 3:03 PM GMT

வெள்ளிக்கிழமை அன்று பிரபல ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய் தன்னுடைய சொந்த சேனலில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பை நம்ப மறுத்து மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். ஏனெனில் இந்தியா டுடே நிறுவனத்தின் கணக்கெடுப்பு முடிவுகள் மோடி அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்தது.

2019 லோக்சபா தேர்தல்களுக்குப் பிறகு இந்தியா டுடே- கார்வி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தேசிய அளவில் கணக்கெடுப்பு, இந்தியாவின் மனநிலையை புரிந்து கொள்ளும் விதமாக எடுக்கப்பட்டது. இது ஒரு முக்கியமான கணக்கெடுப்பு ஆகும். கொரானா வைரஸ் தொற்று நோய் பரவல், சீனாவின் அத்துமீறல்கள் மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு இடையே எடுக்கப்பட்ட இந்த கணக்கெடுப்பு இந்தியர்கள் நரேந்திர மோடி அரசாங்கத்தின் மீது மிகவும் திருப்தியுடன் இருப்பதாக தெரிவிக்கின்றது.



இந்த கணக்கெடுப்பின்படி மூன்றில் இரண்டு பங்கு மக்கள் நரேந்திர மோடியின் பொருளாதார பிரச்சினைகளை கையாளும் திறனுடன் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். 71 சதவிகிதம் பேர் மோடி அரசாங்கம் பொருளாதாரப் பிரச்சினைகளை கையாண்டது குறித்து 'சிறந்த' 'மிகவும் நல்லது' என வாக்களித்துள்ளனர். மன்மோகன் சிங் ஆட்சியைவிட மோடி பொருளாதாரத்தை சிறப்பாக கையாண்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ராஜ்தீப் சர்தேசாய் தன்னுடைய சொந்த சேனலின் கணக்கெடுப்பில் மோடி பெற்ற அதிக வாக்குகளை கண்டு மிகவும் திகைத்துப் போனார். ராகுல் கன்வால் இத்தகைய எண்களைத் திரையில் காட்டிய போது ராஜ்தீப் சர்தேசாய் முகத்தில் முழு அதிர்ச்சி மற்றும் அவநம்பிக்கை தோன்றியது. மோடி அரசாங்கத்திற்கு இதுபோல சாதகமான பதிலை நம்புவது மிகவும் கடினமாக இருக்கிறது போலும் குறிப்பாக நாட்டின் பொருளாதாரம் மோசமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நேரத்தில் மக்கள் மோடிக்கு ஆதரவளிப்பது அவருக்கு மிகவும் அதிர்ச்சியை கொடுத்தது.




இந்த கணக்கெடுப்பின் மீது தன் கருத்துக்களை கூறிய ராஜ்தீப் சர்தேசாய், இந்த கணக்கெடுப்பை நம்புவதற்கு மிகவும் திகைத்துப்போய் இருப்பதாகவும் சீனாவை சமாளிப்பதில் அரசாங்கத்தின் திறனுக்கு விழுந்த வாக்குகளை அவர் நம்புவதாகவும் ஆனால் பொருளாதாரத்தில் விழுந்த வாக்குகளை நம்புவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று கூறினார். மொத்தம் 72 சதவிகிதம் பேர் மோடி அரசுக்கு ஆதரவான பதில் கூறியது அவருக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் நாடு தலைகீழாக சென்று கொண்டிருக்கும் போது பிரதமருக்கு எப்படி இவ்வளவு ஆதரவு கிடைக்கிறது என்று கேட்டார்?



சர்தேசாய் போன்றவர்கள், பொருளாதாரப் பிரச்சினை பொருளாதார பிரச்சினை என்று நாள் முழுக்க கூறி வந்தாலும் சாதாரண பொதுமக்கள் மோடி அரசாங்கத்திடம் மிகவும் திருப்தியாக இருப்பது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்த கணக்கெடுப்பின்படி 78 சதவிகித மக்கள் மோடியின் அரசாங்கத்தை 'மிகவும் நல்லது' அல்லது 'நல்லது' என்ற என்று குறிப்பிட்டுள்ளனர். பிரதமர் மோடிக்கான ஒப்புதல் மதிப்பீடுகள் தற்போது மிகுந்த உயர் நிலையில் உள்ளன.

Next Story