Top
undefined
Begin typing your search above and press return to search.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கழிவறையில் தனிமைப்படுத்திய மம்தா பானர்ஜி அரசு - வீதியில் இறங்கி போராடும் பொதுமக்கள்!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கழிவறையில் தனிமைப்படுத்திய மம்தா பானர்ஜி அரசு - வீதியில் இறங்கி போராடும் பொதுமக்கள்!

MuruganandhamBy : Muruganandham

  |  3 Jun 2020 6:30 AM GMT

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்குவங்க அரசு, கழிவறையில் தனிமைப்படுத்திய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் நெருக்கடியைக் கையாள்வதில் மேற்கு வங்க அரசின் ஆயத்தமற்ற தன்மை மீண்டும் வெளிவந்துள்ளது. மம்தா பானர்ஜி அரசாங்கத்தால் கொல்கத்தாவின் தாரதாலாவின் வார்டு எண் 79 இல் கைவிடப்பட்ட பொது கழிப்பறையில், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கல்கத்தா நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

உள்ளூர் செய்தி சேனலில், கொல்கத்தா மாநகராட்சி இதுபோன்ற நிகழ்வு நடக்கவில்லை என்று மறுத்தது. ஆனால் புலம்பெயர்ந்தோர் குளியலறையில் தங்க வைக்கப்பட்டுள்ள காட்சிகள், அவர்களின் உடமைகள் கல்கத்தா நியூஸ் கேமராவில் படம் பிடித்துள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மாநில தலைநகரில் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட, தாரதலா கோடகாச்சாவின் கைவிடப்பட்ட பொது கழிப்பறையில் வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி ஊடகங்களில் பகிரங்கமாக வெளி வந்தவுடன், கோபமடைந்த உள்ளூர்வாசிகள் வீதிக்கு வந்து, அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக, கல்கத்தா நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயை மாநில நிர்வாகத்தால் எதிர்கொள்ள இயலா தன்மையை வெளி கொண்டுவந்த கல்கத்தா நியூஸ் சேனல் கேபிள் டிவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ஆதாரம்: https://www.opindia.com/2020/06/west-bengal-govt-quarantines-5-migrant-workers-in-abandoned-public-toilet/

Next Story