Top
undefined
Begin typing your search above and press return to search.

சீனாவில் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றும் கிறிஸ்தவ மெஷினரிகள்: யுஹானில் வீடு..வீடாக சென்று இயேசு பெயர் சொல்லி மதம் மாற்றும் முயற்சிகள்!!

Pradeep GunasekaranBy : Pradeep Gunasekaran

  |  9 Feb 2020 12:57 PM GMT

சீனாவின் வுஹான் மாகாணத்தில் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நோயின் பிடியில் அங்கு வசிக்கும் இலட்சக்கணக்கான வெளி நாட்டினர் மற்றும் சீன நாட்டினர் சிக்கியுள்ளனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் மரணம் அடைந்துள்ளனர் என்றும் இலட்சக்கணக்கானோர் நோயால் பாதிப்படைந்துள்ளனர் என்றும் பல வித தகவல்கள் கூறுகின்றன. மோசமான தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நாடு என்பதால் மேற்கத்திய கிறிஸ்தவ நாடுகள் பல அந்த நாட்டுக்கு விமான சர்வீசை நிறுத்திவிட்டன.

அந்த நாடுகள் எதுவும் சீனாவுக்கு வெளிப்படையாக உதவ முன் வரவில்லை. இந்த நிலையில் ஐ,நா. சுகாதார நிறுவனம் மட்டும் இந்த நோயை கட்டுப் படுத்த 1 கோடி பில்லியன் டாலர்கள் கேட்டுள்ளது.

இந்த நிலையில் கிறிஸ்தவ மத அமைப்புகள் பல, இயேசுவின் நற்செய்தி என்ற பெயரில் வுஹான் மாகாணத்தில் முகாமிட்டுள்ளதாகவும் இயேசு நம் அனைவரையும் அழிவில் இருந்து காப்பாற்றுவர் எனக் கோரி அங்குள்ள மக்களுக்கு இலட்சக்கணக்கான சமய சார்புள்ள நோட்டீஸ்களை வழங்கி வருவதாகவும் "ஹிமாலயா குளோபல் அமைப்பு" ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.

அந்த மத பிரச்சாரங்களில் முக கவசங்களை அணிந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ அமைப்பை சேர்ந்தவர்கள் வீடுகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் சென்று " இயேசு ஒருவரே பாவங்களில் இருந்து நம்மை காப்பார் என்றும், நாம் அனைவரும் கடவுளின் கோபமான தீர்ப்பின் கீழ் வாழ்கிறோம். கடவுளின் ஒரே மகனான இயேசு கிறிஸ்து பாவிகள் அனைவரையும் நித்திய அழிவிலிருந்து நம்மை காப்பாற்றுவார்" என்று அறிவிக்கிறது. மேலும் கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் சீன அரசாங்கத்திடமிருந்து துன்புறுத்தல்களை எதிர்கொள்கிறார்கள் என்றும் பிரச்சாரம் செய்யப்படுவதை அந்த வீடியோ கூறுகிறது.

இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தைப் பரப்பும் வீடியோக்கள் மிஷனரிகள், ஆதரவாளர்கள் மற்றும் மத மாற்ற அமைப்புகளால் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

மேலும் இந்த வீடியோவில் "இந்த தொற்றுநோய்க்கு மத்தியில், கிறிஸ்து சீனாவில் தனது ராஜ்யத்தை கட்டியெழுப்ப வேண்டுமென்று ஜெபியுங்கள்" என்ற வரிகள் வருகின்றன.

எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றி மேலும் பற்ற வைக்க முற்படும் இந்த மத மாற்ற கோஷ்டிகளைக் கண்டு சீன மக்கள் அருவருப்படைந்து வருவதாகக் கூறப்படுகிறது.

Next Story