Top
undefined
Begin typing your search above and press return to search.

சாப்பாட்டில் கரப்பான்கள், குடிக்க தண்ணீர் இல்லை, கழிப்பிடம் இல்லை - கேரள அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் அவல நிலை!

சாப்பாட்டில் கரப்பான்கள், குடிக்க தண்ணீர் இல்லை, கழிப்பிடம் இல்லை - கேரள அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் அவல நிலை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 March 2020 11:51 AM GMT

கேரள மாநிலம் காசர்கோடு அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அளிக்கப்பட உணவில் கரப்பான்பூச்சிகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அவலத்தை வீடியோவுடன் படம் பிடித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையாளர் அஷ்லின் மேத்யூ.

அதே போல காசர்கோடு அரசு மருதுவமனையில் கொரோனா தாக்கம் உள்ள 22 நோயாளிகள், ஒரு பெண் உட்பட அனைவரும் ஒரே அறையில் அபாயகரமான முறையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தனி தண்ணீர் பாடில்கள் இல்லாமல், வெறும் இரண்டு கழிப்பறைகளுடனும் குப்பைக்கூடங்களுடனும் கொரோனா நோயாளிகள் முற்றிலும் சுகாதாரமற்ற முறையில் மருத்துவமனையில் இருப்பது, கேரள அரசின் இயலாமையை காட்டுகிறது.


Next Story