Top
undefined
Begin typing your search above and press return to search.

உலகம் முழுவதிலும் இன்று ஒரு லட்சம் பேருக்கு கொரோனா, இரண்டாவது அலை தாக்கும் - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை.!

உலகம் முழுவதிலும் இன்று ஒரு லட்சம் பேருக்கு கொரோனா,  இரண்டாவது அலை தாக்கும் - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை.!

V.ThangavelBy : V.Thangavel

  |  22 May 2020 7:35 AM GMT

உலகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. முதன் முதலாக சீனாவில் வூகான் மாகானத்தில் டிசம்பர் 1ம் தேதி கொரோனா வைரஸ் தோன்றியது. இது படிப்படியாக உலகம் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியது. வீட்டுலேயே பொதுமக்கள் முடங்கியுள்ளனர். மேலும், வெளியில் செல்லும் மக்கள் முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல், அடிக்கடி கைகளை சானிடைசர் திரவம் கொண்டு சுத்தப்படுத்துதல் என்று பல வழிமுறைகளை கையாண்டும் கொரோனா பரவுவது குறையாமல் உள்ளது. இதனால் உலக நாடுகள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கியுள்ளது.

உலகம் முழுவதும் இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமானோர்கள் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் 1 லட்சத்து 1,500 -க்கும் மேற்பட்டவர்களுக்கு தாக்கி இருப்பது பதிவாகி உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் ஒரு நாளில் பதிவான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை இது என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

இதன் மூலம் உலகெங்கும் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 49 லட்சத்தை கடந்து விட்டதாக உலக சுகாதார நிறுவனம் கூறினாலும், உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. உலகில் தற்போது குறைவான பரிசோதனைகள் மட்டுமே நடந்துவருவதாகவும், பல கேஸ்கள் வெளியில் வராமல் இருப்பதாகவும் ஜெனீவாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகளவில் அதிக உயிரிழப்பு மற்றும் பாதிப்பு சந்தித்து வருகிற நாடாக அமெரிக்காதான் முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த நிலையில் ரஷியா, பிரேசில், இங்கிலாந்து ஆகிய நாடுகள் உள்ளன.

இது பற்றி அந்த அமைப்பின் தலைவரான டெட்ரோஸ் அதனோம் கூறியதாவது: கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வருவதற்கு இன்னும் நீண்ட தூரம் சென்றாக வேண்டும் என்று எச்சரித்தார். இது குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளை குறி வைத்து தாக்குவது பற்றி அவர் கவலை அளிக்கிறது. இதற்கிடையே ரஷ்யா தலைநகரான மாஸ்கோவில் உலக சுகாதார நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் மெலிடா வுஜ்னோவிக் 'ரோசியா 24' வானொலிக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளதாவது:

கொரோனா வைரஸ் இன்றும் அச்சுறுத்தலாகவே தெரிகிறது. இதை மக்கள் புரிந்து கொள்வது மிக அவசியம். கொரோனா வைரஸ் தொற்று முதல்முறையாக ஏற்பட்ட எல்லா இடங்களிலும், 2வது அலையாக தாக்கும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த டிசம்பர் 1ம் தேதி தோன்றினாலும்கூட, கிட்டத்தட்ட 100 நாட்கள் கடந்த பின்னர்தான் உலக சுகாதார நிறுவனம், கொரோனா வைரஸ் தொற்றை உலகளாவிய தொற்றுநோயாக கடந் மார்ச் 11ம் தேதி அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு வாழ்வதுதான் சிறந்த வழியாக இருக்கும். அரசு கூறுவதை தொடர்ந்து பின்பற்றி வந்தால் கொரோனா வைரஸை முற்றிலும் ஒழிக்கலாம்.

Next Story