Top
undefined
Begin typing your search above and press return to search.

பிரேசில் நாட்டில் இளைஞர்களை குறிவைத்து தாக்கும் கொரோனா வைரஸ் - இதன் பின்னணி என்ன?

பிரேசில் நாட்டில் இளைஞர்களை குறிவைத்து தாக்கும் கொரோனா வைரஸ் - இதன் பின்னணி என்ன?

Vignesh KBy : Vignesh K

  |  22 May 2020 11:28 AM GMT

சீனாவில் உள்ள உகான் நகரில் இருந்து உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரசால் உலகம் முழுவதும் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் அமெரிக்காவில் தான் அதிக பாதிப்பும் மற்றும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இந்த வைரசால் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் போன்ற உடலில் பிரச்சனை இருப்பவர்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், பிரேசில் நாட்டில் கொரோனாவால் இளைஞர்கள் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது. இந்த வைரஸால் பிரேசிலில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 20ஆயிரத்துக்கும் அதிகமாக உயிரிழந்துள்ளனர்.

பிரேசில் நாட்டின் மக்கள் தொகையில் 13.6 சதவீதம் பேர் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள். மேலும், பிரேசில் நாட்டில் ஏப்ரல் மாதம் பலியானவர்களின் விகிதம் (60 வயதுக்குக் கீழ் உள்ளோர்) 19 சதவீதமாக இருந்தது. ஆனால், தற்போது 37 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதனிடையே 20 முதல் 39 வயது வரை உள்ளவர்கள் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுவதாகவும், 60 வயதுக்கு மேல் பாதிக்கப்பட்டவர்களின் விகிதத்தை விட இது இரு மடங்கு அதிகமாக உள்ளது என வல்லுனர்களால் கூறப்படுகிறது.

இதற்கு காரணம். பிரேசிலில் இளம் வயது உள்ளவர்களை அதிகமாக உள்ளனர். இது மற்ற நாடுகளை விட இங்கு அதிகமான இளைஞர்கள் உள்ளனர். இவர்கள் ஊரடங்கு உத்தரவின் கட்டுப்பாடுகளை சரியாக பின்பற்றாததால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என பிரேசிலியா பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் மவுரோ சான்செஸ் கூறியுள்ளார். மேலும், இதற்கு பல காரணங்களை பலரும் தெரிவித்து வருகிறார்கள் .

Source: https://www.dinamani.com/world/2020/may/22/in-brazil-covid-19-hitting-young-people-harder-3418389.html

Next Story