Top
undefined
Begin typing your search above and press return to search.

லே, லடாக் பகுதியில் குவியும் சீன ராணுவம், இந்தியாவை சீண்டும் சீனா - எல்லையில் பதற்றம்!

லே, லடாக் பகுதியில் குவியும் சீன ராணுவம், இந்தியாவை சீண்டும் சீனா - எல்லையில் பதற்றம்!

Arjunan IlayarajaBy : Arjunan Ilayaraja

  |  25 May 2020 2:13 AM GMT

உலகமே கொரோனா நோய் தொற்றில் இருந்து தனது நாட்டு மக்களை காக்க போரடி வருகின்றனர். ஆனால், உலக மனித சமுதாயம் சங்கடத்தில் இருப்பதற்கு காரணமான சீன தேசம் தன் நாட்டின் மீதான அவநம்பிக்கையை போக்கும் விதமாகவும் சர்வதேச சமூகத்தின் மனநிலையில் மாற்றும் குறுக்கு புத்தியை சீன பயன்படுத்தி வருகிறது.

சீனா தான் கொரோனா நச்சு கிருமியை பரப்பியது என சர்வதேச சமூகம் குற்றம் சாட்டியது மேலும் விசாரணை நடத்த வேண்டும் என கூறி வருகின்றனர் இதை எல்லாம் மறைக்க இந்திய எல்லையில் பதட்டத்தை உருவாக்கி வருவது சர்வதேச சமூகத்தின் அவநம்பிக்கையை சம்பாதித்து வருகிறது சீனா.

கொரோனா அச்சத்தால் பல்வேறு முன்னனி தொழில் நிறுவனங்கள் சீனாவை விட்டுவெளியேறி இந்தியாவை நோக்கி வருகின்றனர் இதை பொருத்து கொள்ள இயலாத சீனா இந்தியாவை அச்சுறுத்த நினைக்கிறது.

இந்திய அரசு சீனாவை கட்டுப்படுத்த இந்தியா தனது கடல் எல்லையை தனது கட்டுபாட்டில் கொண்டுவந்தால் சீனாவிற்கு தலைவலியாக அமைந்து விடும் சீனாவின் வர்த்தகம் கேள்விக்குறியாக மாறும் என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள்.


இந்தியாவின் லடாக் எல்லை பகுதியில் சீனா ராணுவத்தை குவித்து வருவது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. லடாக் யூனியன் பிரதேசத்தின் பான்காங் சோ ஏரி மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு எல்லைப் பகுதிகளில் சீனா வேகமாக படைகளை குவித்து வருகிறது.

சீனாவின் இந்த நடவடிக்கை இந்திய ராணுவத்துடனான அதன் மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வர விரும்பவில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது என்று அப்பகுதியினர் தெரிவித்தனர். கடந்த இரண்டு வாரத்தில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் சீனா நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களை அமைத்துள்ளது. பதுங்கு குழிகள் அமைப்பதற்கான இயந்திரங்களையும் வரவழைத்துள்ளது.

சீனாவின் இந்த நடவடிக்கைகள் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பதற்றம் நிறைந்த சூழலில் தான் நமது ராணுவத் தளபதி எம்.எம். நரவானே கடந்த வெள்ளிக்கிழமை லே பகுதியில் உள்ள 14 முகாம்களுக்கு வருகை புரிந்தார். லே லடாக் பகுதியில் இந்திய படைகளின் தயார்நிலை குறித்தும் ஆய்வு செய்தார்.

முன்னதாக, கிழக்கு லடாக் பகுதியில் 250க்கும் மேற்பட்ட இந்திய, சீன ராணுவ வீர‍ர்கள் கல்வீச்சு தாக்குதலில் கடந்த 5, 6 தேதிகளில் ஈடுபட்டத்தைத் தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையிலான உறவு மோசமான நிலையை அடைந்துள்ளது.


இருதரப்பிலும் நூறுக்கும் மேற்பட்ட வீர‍ர்கள் காயமடைந்தனர். இதற்கு முன்பு கடந்த 9ம் தேதி சிக்கிம் மாநிலத்தின் கிழக்கு பகுதியிலும் இரு தரப்பு வீர‍ர்களும் மோதலில் ஈடுபட்டனர்.

கிழக்கு லடாக் பகுதியில் கடந்த வாரத்தில் சீன படைகள் ஊடுருவியதாக அறிக்கைகள் வந்த போதிலும் அதிகாரப்பூர்வமாக உறுதிப் படுத்தப்படவில்லை.

சென்ற வாரத்தில் மட்டும் இரு நாடுகளின் ராணுவப்பிரிவு அதிகாரிகள் மட்டத்தில் 5 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட எல்லைகளில் மட்டுமே ராணுவத்தை நிறுத்தி வைத்துள்ளதாகவும், சீனா ஒவ்வொரு எல்லைப் பகுதிகளிலும் அத்துமீறி ராணுவத்தினரை ஊடுருவ செய்வதாகவும் இந்தியா சுட்டிக் காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் சீண்டல்கள் எல்லை மீறி போகிறது மேலும் பாகிஸ்தான் நாட்டை தன் வசப்டுத்த இந்தியாவை மிரட்டி பார்கிறது சீனாவின் செயல்களை கட்டுப்படுத்த இந்திய ராணுவம் வீயுகத்தை உருவாக்கியுள்ளது.

Next Story