Top
undefined
Begin typing your search above and press return to search.

ஐ.நா சபை வழங்கிய கொரோனா நிவாரண உதவி நிதி பாலஸ்தீன பயங்கரவாதிகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது - ஜெருசலேம் போஸ்ட் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்.!

ஐ.நா சபை வழங்கிய கொரோனா நிவாரண உதவி நிதி பாலஸ்தீன பயங்கரவாதிகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது - ஜெருசலேம் போஸ்ட் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்.!

R SubbaiahBy : R Subbaiah

  |  25 May 2020 5:35 AM GMT

உலக சுகாதார அமைப்பு (WHO) மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அலுவலகத்திற்கு (OCHA ) அளிக்கப்பட கொரோனா நிவாரண நிதி பாலஸ்தீன விடுதலைக்கான மக்கள் முன்னணி (PFLP) க்கு திருப்பி விடப்பட்டுள்ளதை என்ஜிஓ மானிட்டர் என்ற ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்துள்ளதாக ஜெருசலேம் போஸ்ட் தெரிவித்துள்ளது.

இந்த பயங்கரவாதக் குழு குழு ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் கனடா போன்ற பல நாடுகளால் பயங்கரவாத அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, குவைத், நார்வே, சுவீடன், ஸ்பெயின், இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் பாலஸ்தீன மக்களுக்காக ஐ.நா சபை மூலம் வழங்கிய அவசரகால திட்ட நிதியின் ஒரு பகுதியே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளதாக அந்த பத்திரிகை குற்றம் சாட்டியுள்ளது.

ஐக்கியநாடுகள் சபை குற்றச்சாட்டு

பாலஸ்தீனிய மகளிர் குழுக்களின் ஒன்றியம் (யு.பி.டபிள்யூ.சி), பாலஸ்தீன சுகாதாரப் பணிக் குழுக்கள் ஒன்றியம் (யு.எச்.டபிள்யூ.சி), வேளாண் பணிக்குழுக்கள் ஒன்றியம் (யு.ஏ.டபிள்யூ.சி) மற்றும் பாலஸ்தீனிய மனித உரிமைகளுக்கான மையம் (பி.சி.எச்.ஆர்) ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அதனுடன் மறைமுகமாக தொடர்பில் உள்ள பாலஸ்தீன விடுதலைக்கான மக்கள் முன்னணி (PFLP) க்கு இந்த நிதியின் ஒரு பகுதி திருப்பிவிடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ரினா ஷ்னெர்ப் (17) என்பவர் கொடூரமாக கொல்லப்பட்ட ஒரு வழக்கில் இந்த என்.ஜி.ஓ. அமைப்பின் உறுப்பினர்கள் 2019 இல் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. உதாரணமாக, ஷ்னெர்பின் கொலை தொடர்பாக இப்போது விசாரணையில் நிற்கும் வலீத் ஹனாட்சே HWC இன் நிதி மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்தார், அதே நேரத்தில் UAWC இன் நிதி இயக்குநராக பணியாற்றிய சமர் ஆர்பிட் என்பவரும் இதேபோல கொலை வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டார் எனவும் ஐநா அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

எவ்வாறாயினும் மேற்கண்ட பயங்கரவாத அமைப்புக்கு கொரோனா வைரஸ் தொற்றுநோயுடன் எந்த தொடர்பும் இல்லை என்றாலும், அதற்கு இஸ்ரேலின் உள் அரசியலுடன் தொடர்பு இருப்பதாலேயே இவ்வாறு நிதி திருப்பி விடப்பட்டுள்ளது என என்ஜிஓ மானிட்டர் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு காலத்திலும் சுரண்டும் பயங்கரவாதிகள்

ஊரடங்கு காலத்திலும் மக்களைப் பற்றி கவலைப்படாத பாலஸ்தீன விடுதலைக்கான மக்கள் முன்னணி அமைப்பினர் இது போன்று நிதி சுரண்டும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், ஆன்லைன் மூலம் இளைஞர்களைச் சேர்ப்பதற்காக சமூக ஊடகங்களில் தங்கள் முயற்சிகளை தீவிரப்படுத்தி இருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் எச்சரித்துள்ளார். மேலும் வைரஸால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இளைஞர்களிடையே ஏற்பட்ட 'கோபத்தையும் விரக்தியையும்' தீவிரவாதிகள் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

https://www.opindia.com/2020/05/un-ocha-funding-palestinian-jihadis-humanitarian-aide-coronavirus-details-report/

Next Story