Top
undefined
Begin typing your search above and press return to search.

சீன இரும்பு உற்பத்திக்கு முடிவு நெருங்கிவிட்டது - வாய்ப்பை தக்கவைக்குமா இந்தியா..?

சீன இரும்பு உற்பத்திக்கு முடிவு நெருங்கிவிட்டது - வாய்ப்பை தக்கவைக்குமா இந்தியா..?

Raghavan VBy : Raghavan V

  |  25 May 2020 10:26 AM GMT

2018 ஆம் ஆண்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 25% எஃகு இறக்குமதிக்கு கடுமையான கட்டண தடைகளை விதித்திருந்தார். அவரது இந்த நடவடிக்கை பரவலான விமர்சனங்களை சந்தித்தது. ஏனெனில் இது சீனாவை மட்டுமல்ல, அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளான, ஐரோப்பிய நாடுகளை தளமாகக் கொண்ட நிறுவனங்களையும் பாதிக்கிறது. ஆயினும்கூட, டிரம்ப் ஸ்டீல் மீதான தனது "தேசிய பாதுகாப்பு" கட்டணங்களைத் தொடர்ந்தார். மேலும், இந்த மாத தொடக்கத்தில் அவற்றை விரிவுபடுத்தினார். எவ்வாறாயினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இரும்பை மூலோபாய வியாபார பொருளாகவே கருதுகிறார்.

ட்ரம்ப் இரும்பை மூலோபாய வியாபார பொருளாக கருதுகையில், இரும்பு உற்பத்தி என்று வரும்போது சீனாவிற்கு கிட்டத்தட்ட ஒரு சிங்கத்தின் பங்கை வழங்கிய உலகின் பிற பகுதிகளுக்கு ட்ரம்ப்பின் கருத்தில் உடன்பாடு இல்லை. உலகில் இரும்பு 51.3% க்கும் அதிகமான நாடுகளில் உற்பத்தி செய்பட்டாலும், இந்தத் துறையில் சீனாவின் ஆதிக்கம் மிகவும் கவனிக்காதக்கது.

துருப்பிடிக்காத இரும்பைப் பொறுத்தவரையில் சீனாவை முழுமையாக நம்பியிருப்பது ஒரு மூலோபாய படுகுழி போல தோன்றுகிறது. உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு அதன் உற்பத்தியைக் கட்டுப்படுத்த பெய்ஜிங் அறிவுறுத்துகிறது. ஆனால் கட்லரி முதல் விமானம், டேங்கர்கள் மற்றும் அறுவை சிகிச்சை கருவிகள் வரை எல்லாவற்றிற்கும் அண்டர்ரேட்டட் மெட்டல் தேவைப்படுகிறது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்கள்,"போர்க்கப்பல்கள் முதல் விமானம் வரை அனைத்தும் சீன இரும்பை சார்ந்தது என்றால் எப்படி இருக்கும்?" கற்பனை செய்து பாருங்கள்.

2005 ஆம் ஆண்டில், ஆசிய நிறுவனமானது உலகின் இரும்பு 12.9% மட்டுமே உற்பத்தி செய்தது, ஐரோப்பா 34.8% மற்றும் அமெரிக்காவில் 9.2% உற்பத்தி செய்தது. சீனா இப்போது உலகின் 52.6% இரும்பை உற்பத்தி செய்வதால், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் பங்குகள் மோசமான 15.6% மற்றும் 5.5% ஆக குறைந்துவிட்டன.

இரும்பு உருவாக்கும் துறை அழகற்றதாகக் கருதப்பட்டதால், மேற்கத்திய நாடுகள், அதில் சீனாவை அனுமதிக்கும் தவறு செய்தன. அதன் விளைவாக 2018 ஆம் ஆண்டில், உலகின் பத்து பெரிய இரும்பு உற்பத்தியாளர்களில் ஆறு பேர் சீன நிறுவனங்களாக மாறினர்.

2018 ஆம் ஆண்டில், சீனா 930 மில்லியன் மெட்ரிக் டன் பண்படாத இரும்பை உற்பத்தி செய்தது. ஆனால், சீனா பாவ் குழுமம் வெறும் 67.43 மில்லியன் மெட்ரிக் டன் ஸ்டீலை உற்பத்தி செய்தது- பாவ் குழுமம் சீனாவின் உற்பத்தியில் ஒரு சிறிய பங்குதான். ஆனால் இது இன்னும் உலகின் இரண்டாவது பெரிய இரும்பு உற்பத்தியாளராக மாறியுள்ளது. எச்.பி.ஐ.எஸ் குழுமம் இன்னும் குறைந்த ஸ்டீலை 46.80 மில்லியன் மெட்ரிக் டன்களில் உற்பத்தி செய்தது, இருப்பினும் இது உலகளாவிய தரவரிசையில் நான்காவது இடத்தைப் பிடித்தது. இதன் அடிபடையில், சீனாவிற்கும் பிற நாடுகளுக்கும் உற்பத்தி திறன் இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது என்பது தெளிவாகிறது.

930 மில்லியன் மெட்ரிக் டன் என்பது சீனாவுக்குள் சீனா உற்பத்தி செய்ததாகும், மேலும் சீனா தனது சொந்த எல்லைகளுக்கு அப்பால் என்ன உற்பத்தி செய்கிறது என்பதைக் கருத்தில் கொண்டால் அதன் உண்மையான திறன் இன்னும் அதிகமாக இருக்கலாம்.

எடுத்துக்காட்டாக, இந்தோனேசியாவில் ஒரு துருப்பிடிக்காத-இரும்பு ஆலை உள்ளது, இது ஒவ்வொரு ஆண்டும் 3 மில்லியன் மெட்ரிக் டன் உலோகத்தை உற்பத்தி செய்ய முடியும். இந்த ஆலை இந்தோனேசியாவுடையது அல்ல, மாறாக இது ஒரு சீன இரும்பு உற்பத்தி நிறுவனத்துக்கு சொந்தமானது.

சீனா இரும்பை உற்பத்தி செய்யும் ஒரே நாடு இந்தோனேசியா மட்டுமல்ல, எஃகு உற்பத்தியை அதிகரிப்பதற்காக உலகின் தொலைதூர பகுதிகளை இலக்காகக் கொண்டுள்ளது. சீனாவின் ஹெபீ இரும்பு மற்றும் எஃகு (HBIS) குழு தென்னாப்பிரிக்காவில் ஒரு எஃகு ஆலையை அமைப்பதற்கான ஒரு லட்சியத் திட்டத்தைக் கொண்டுள்ளது. அத்திட்டம் நிறைவடைந்தால், இது பெய்ஜிங்கின் மிகப்பெரிய வெளிநாட்டு இரும்பு ஆலையாக இருக்கும்.

உண்மையில், 3 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட லத்தீன் அமெரிக்க நாட்டில் ஒரு இரும்பு ஆலை அமைக்க சீனா கம்யூனிகேஷன்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி (சி.சி.சி.சி) திட்டமிட்டுள்ள நிலையில், பிரேசிலின் இரும்பு துறையில் சீனா பெருமளவில் முதலீடு செய்து வருகிறது.

COVID-19 சூழலில், சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டியதன் அவசியம் குறித்த மேம்பட்ட புரிதல் உள்ளது, இது மூலோபாய பொருளான எஃகு துறைக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். பெய்ஜிங்கின் ஆதிக்கத்தால் ஏற்படும் அச்சுறுத்தலைத் தவிர்க்க அனைத்து நாடுகலும் இரும்பு உற்பத்தியின் பங்குகளை மறுவடிவமைக்க வேண்டும்.

இந்தியா 2019 ஆம் ஆண்டில் 111.2 மில்லியன் மெட்ரிக் டன் ஸ்டீல் உற்பத்தியைக் செய்யும் அளவு ஒரு சாத்தியமான ஸ்டீல் சந்தையைக் கொண்டுள்ளது, அதாவது உலக உற்பத்தியில் 5.9% பங்கு. ஆனால் அது இப்போது தனது சொந்த ஸ்டீல் பிளேயர்களை அதிகாரம் செய்ய வேண்டும், குறிப்பாக ஆர்சலர் மிட்டல் - லக்சம்பர்க் அடிப்படையிலான குழுவை, 2006 இல் இந்தியருக்கு சொந்தமான மிட்டல் ஸ்டீல் குழு கையகப்படுத்தியது.

இந்த ஸ்டீல் மேஜர் 2018 ஆம் ஆண்டில் 96.42 மில்லியன் மெட்ரிக் டன்களை உற்பத்தி செய்தது, இது உலகின் மிகப்பெரிய எஃகு தயாரிப்பாளராக திகழ்கிறது.

மேலும், தென் கொரிய ஸ்டீல் மேஜர்களான ஹூண்டாய் ஸ்டீல் கம்பெனி மற்றும் போஸ்கோ நிறுவனங்களும் உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்றுவதில் ஆர்வம் காட்டுகின்றன. இது இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டிய ஒரு அற்புதமான வாய்ப்பு. கடந்த ஆண்டு, மத்திய எஃகு மந்திரி தர்மேந்திர பிரதான் இந்தியாவில் முதலீடு செய்ய ஜப்பான் ஸ்டீல் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார், என்பது குறிபிடத்தக்கது.

கொரோனா வைரஸுக்குப் பிந்தைய சூழ்நிலையில் உலகில் உலகளாவிய இரும்பு உற்பத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது தெளிவாகிறது, மேலும் இந்தியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற ஆர்வமுள்ள பங்குதாரர்கள் ஒன்றிணைந்து தங்கள் உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டும் என்றும் தெரியவந்துள்ளது.

Next Story