Kathir News
Begin typing your search above and press return to search.

இந்த அறிகுறிகள் மூலம் உங்கள் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு இல்லை என்பதை அறிந்து கொள்ளலாமா?

இந்த அறிகுறிகள் மூலம் உங்கள் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு இல்லை என்பதை அறிந்து கொள்ளலாமா?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  7 May 2021 11:59 AM GMT

தற்போது தொற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகம் பாதிக்கும் பகுதியாக நுரையீரல் முக்கிய இடம் பெறுகிறது. அதாவது ஒருவர் சுவாசித்தல் கடினம் ஆனால் அவர்களுக்கு வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது என்றுதான் அர்த்தம். எனவே இயல்பாக சுவாசிப்பவர்களுக்கு, நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் சுவாசத்திற்கும் வேறுபாடு உள்ள காரணத்தினால் தான் நமக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. எனவே மக்கள் தற்பொழுது சுவாசிப்பதில் அதிலும் இயற்கையான முறையில் சுவாசிப்பதில் கவனம் செலுத்த உள்ளனர்.


நாம் சுவாசிப்பது என்பது ஒரு இயற்கையான செயல்முறை. நாம் பிறந்தது முதல் இறக்கும் கடைசி நொடி வரை நம் இதயம் மற்றும் உடல் சீராக இயங்க சுவாசிப்பது மிக மிக அவசியம். இப்படி நாம் சுவாசிக்கும் போது உள்ளிழுக்கும் ஆக்சிஜன் நம் ரத்தத்தில் கலந்து உடலில் உள்ள முக்கிய உறுப்புகள், செல்கள் மற்றும் திசுக்கள் அனைத்தும் சீராக செயல்பட உதவுகிறது. நம் இரத்தத்தில் போதுமான ஆக்ஸிஜன் அளவு இல்லாமல் போகும் நிலைமை, ​​அது 'ஹைபோக்ஸீமியா' என்று அழைக்கப்படுகிறது. இந்த ஹைபோக்ஸீமியா குறைபாடு ஏற்படும்போது கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும். இந்த நிலைமை ஏற்படும் போது செயற்கையாக தான் நாம் மருத்துவ ஆக்சிஜனை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.


ஆனால் இது போன்று இரத்தத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்பது சில நொடிகளில் ஏற்படும் விஷயமல்ல, ஆக்சிஜன் அளவு குறையும்போது நம் உடல் சில அறிகுறிகளின் மூலம் நமக்கு அதை தெரியப்படுத்தும். அது என்ன அறிகுறிகள் என்பதை இப்போது பார்க்கலாம். இரத்தத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும் போது அதை நமக்கு முதலில் தெரியப்படுத்தும். பொதுவான அறிகுறி தலைச்சுற்றல் அல்லது லேசான தலைவலி. நீங்கள் எப்போதாவது இப்படி உணர்ந்து இருக்கிறீர்களா? ஆம் எனில், அது உடனே இரத்தத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்று பயப்பட வேண்டும். உட்கார்ந்து வேகமாக எழுந்தவுடன் கூட பெரும்பாலான மக்களுக்கு தலைச்சுற்றல் ஏற்படுவது போல இருக்கும். அதெல்லாம் நாம் ஆக்சிஜன் பற்றாக்குறை என்று சொல்லிவிடக்கூடாது. ஒருவருக்கு இரத்தத்தில் போதுமான ஆக்ஸிஜன் இல்லையென்றால், ஒரு சிறிய வேலையைச் செய்தாலுமே இதுபோன்ற பிரச்சினையை அனுபவிப்பார்கள். எல்லோருக்கும் இப்படி ஏற்படும் என்று சொல்லிவிட முடியாது.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News