Kathir News
Begin typing your search above and press return to search.

விஜய் தாக்கல் செய்த சொகுசு கார் மேல்முறையீட்டு மனு - இன்று விசாரணை!

விஜய் தாக்கல் செய்த சொகுசு கார் மேல்முறையீட்டு மனு - இன்று விசாரணை!

Mohan RajBy : Mohan Raj

  |  22 July 2021 2:15 AM GMT

நடிகர் விஜய் தாக்கல் செய்துள்ள சொகுசு கார் வரிவிலக்கு மேல்முறையீட்டு மனுவில் அபராதத்தை ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கை மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.


நடிகர் விஜய் கடந்த 2012-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். காரை இறக்குமதி செய்த போது, இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி விதிக்க தடை விதிக்க வேண்டும் என விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். எம்.சுப்ரமணியம், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என கருத்து தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், விஜய் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில் அபராதத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும், தன்னை பற்றி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை நீக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது இன்று இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை துரைசாமி, ஹேமலதா முன்பு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News