Top
undefined
Begin typing your search above and press return to search.

கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா அறிவித்த ஒருநாள் முழு ஊரடங்கு : மாநிலம் முழுவதும் மக்கள் பரிபூரண ஒத்துழைப்பு.!

கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா அறிவித்த ஒருநாள் முழு ஊரடங்கு : மாநிலம் முழுவதும் மக்கள் பரிபூரண ஒத்துழைப்பு.!

R SubbaiahBy : R Subbaiah

  |  25 May 2020 2:43 AM GMT

கர்நாடக மாநிலத்தில் நேற்று முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. கொரோனா வைரஸ் நோய் தடுப்பில் கர்நாடக அரசு மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை தோறும் கர்நாடக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று ஏற்கனவே முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்திருந்தார். அதன்படி நேற்று மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பஸ்கள் ஆட்டோக்கள் ஓடவில்லை அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன பெங்களூரு உட்பட கர்நாடக மாநிலம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 23 முதல் தொடர்ந்து ஊரடங்கு அறிவிக்கப் பட்டது. இடையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இதனால் பஸ்கள், ரயில்கள், விமானங்கள், ஆட்டோக்கள் இயக்கப் பட்டது.

தொழிற்சாலைகள் திறக்கப் பட்டது. ஆனால், தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்தவாறு உள்ளது. அது இரண்டாயிரமாக எட்டிவிட்டது. நேற்று சனிக்கிழமை மட்டும் 216 பேருக்கு பாசிடிவ் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

எனவே கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க, சுய கட்டுப்பாட்டை மேற்கொள்ளும் வகையில் இன்று ஊரடங்கை அரசு முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவித்தது. அதன் படி இன்று காலை கே.எஸ்.ஆர்.டி.சி., பி.எம்.டி.சி., பஸ்கள் இயக்க தடை விதிக்க ப்பட்டது. இதனால் மெஜஸ்டிக் பஸ் நிலையம், சாந்தி நகர், சிவாஜி நகர், எஷ்வந்தபுரம், கே.ஆர்.புரம், கெங்கேரி பஸ்நிலையங்கள் வெறிச் சோடியது.

உள்ளூரிலும, உள் மாவட்டங்களிலும் வாகன போக்குவரத்து வசதி இல்லாததால் பயணங்கள் மேற்கொள்ள முடியாமல் போனது.டாக்சி, கேம்ஸ், ஆட்டோக்கள் இயங்க வில்லை. வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டது. தொழிற்சாலைகளுக்கும் விடுமுறை விடப்பட்டது.அத்தியாவசிய பொருட்களுக்கான விற்பனை மட்டுமே குறிப்பிட்ட நேரம் வரை அனுமதிக்கப்பட்டது.

Next Story