Top
undefined
Begin typing your search above and press return to search.

ஒலிம்பிக் போட்டியில் மூன்று முறை தங்கம் வென்ற இந்திய ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் காலமானார்.!

ஒலிம்பிக் போட்டியில் மூன்று முறை தங்கம் வென்ற இந்திய ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் காலமானார்.!

Vignesh KBy : Vignesh K

  |  25 May 2020 6:33 AM GMT

ஒலிம்பிக் போட்டியில் மூன்று முறை தங்கப்பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் உடல்நிலை குறைவால் இன்று உயிரிழந்தார்.

பல்பீர் சிங்குக்கு 95 வயது ஆகிறது. இவர் பஞ்சாப் மாநிலங்களில் உள்ள மெகாலியில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு மூளையில் ஏற்பட்ட இரத்த உறைவு காரணத்தால் சென்ற 18ஆம் தேதி முதல் அரை கோமாவில் சிகிச்சையில் இருந்து உள்ளார். மேலும் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்துள்ளார்.

பல்பீர் சிங் 1948, 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி வெற்றி பெற்றதுக்கும் தங்கப் பதக்கம் வென்றதற்கும் முக்கியக் காரணமாக இருந்தார். 1956ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் இறுதி போட்டியில் நெதர்லாந்து அணியை 6-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அணி வென்றது. அந்த போட்டியில் கேப்டனான பல்பீர் சிங் 5 கோல்கள் அடித்து சாதனை படைத்தார்.

மேலும், இவர் அதிக கோல் அடித்த இந்திய ஹாக்கி வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். இதன் மூலம் இவருக்கு 1957 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது மற்றும் 2015 ஆம் ஆண்டு மேஜர் தியான் சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவப்படுத்தப்பட்டார்.

Next Story