Top
undefined
Begin typing your search above and press return to search.

வெட்டுக்கிளிகளை அழிப்பதற்கு தன்னை வைத்து மீமிஸ் தயாரித்தவர்களுக்கு விவேக் பாராட்டு.!

வெட்டுக்கிளிகளை அழிப்பதற்கு தன்னை வைத்து மீமிஸ் தயாரித்தவர்களுக்கு விவேக் பாராட்டு.!

Vignesh KBy : Vignesh K

  |  30 May 2020 1:53 AM GMT

இந்தியாவில் கொரோனா வைரஸ் பிரச்சினையை அடுத்து தற்போது வெட்டுக்கிளிகளின் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது மத்திய மற்றும் மாநில அரசனுக்கு பெரும் அளவில் தலைவலியாக உள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு வெட்டுக்கிளிகளின் அட்டகாசம் இருந்தது. தற்போது ஆப்பிரிக்காவில் இருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவுவிற்கு வந்த வெட்டுக்கிளிகளின் பல மாநிலங்களுக்கு சுற்றி வருகிறது. தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான விவசாய பயிர்களை நாசம் செய்துள்ளது.

இந்த வெட்டுக்கிளிகள் மணிக்கு 15 முதல் 20 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் மற்றும் 150 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும் ‌. இந்தியாவில் இதுவரை குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு சென்ற வெட்டுக்கிளியின் கூட்டத்தை அதிகரித்து வருகிறது. மேலும், இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

தற்போது வெட்டிகிளிகளின் கூட்டத்தை வைத்து பலரும் மீம்ஸ் தயாரித்து வருகின்றனர். இதனிடையே நடிகர் விவேக் நடித்த ரன் படத்தில் இருந்து ஒரு காட்சியின் புகைப்படத்தை வைத்து மீம்ஸ் தயாரித்துள்ளனர். அந்த மீம்ஸ் நடிகர் விவேக் வரைக்கும் சென்றுள்ளது. அந்த மீம்ஸை அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



அந்த பதவியில் அவர் குறிப்பிட்டது: ஒரு படத்தை வச்சிக்கிட்டு என்னவெல்லாம் சொல்ரீங்க!! யாரை எல்லாம் ஓட்டுரீங்க!! "Memes பசங்க ஐடியா உள்ள பசங்க என பாராட்டியுள்ளார்.


Next Story