Top
undefined
Begin typing your search above and press return to search.

வலுவான அறிகுறிகளுடன் தொடங்கியது தென்மேற்கு பருவமழை : மத்திய அரசின் அறிவிப்புகளால் கொரோனாவின் பாதிப்புகளை விவசாயம் தூக்கி எறியும் என நிபுணர்கள் கருத்து.!

வலுவான அறிகுறிகளுடன் தொடங்கியது தென்மேற்கு பருவமழை : மத்திய அரசின் அறிவிப்புகளால் கொரோனாவின் பாதிப்புகளை விவசாயம் தூக்கி எறியும் என நிபுணர்கள் கருத்து.!

R SubbaiahBy : R Subbaiah

  |  2 Jun 2020 2:04 AM GMT

தென்மேற்கு பருவமழை தாமதமில்லாமல் சரியான நேரத்தில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பெய்யத்தொடங்கியதும், விவசாயிகளுக்கான மத்திய அரசின் சிறப்பு அறிவிப்புகளும் விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்கு கூட்டுவதுடன் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகளை விவசாயம் சரி செய்யும் என வானிலை மற்றும் வேளாண் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

தென்மேற்கு பருவமழை பெரும்பாலும் ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் அல்லது மூன்றாம் வாரத்தில் கூட தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மிக சரியான நேரத்தில் ஜூன் 1- ந்தேதியே வலுவான அறிகுறிகளுடன் இப்பருவமழை தொடங்கியது என்றும், கொரோனாவால் பொருளாதாரம் வீழ்ந்துள்ள இந்த சோதனையான கால கட்டத்தில் மக்களுக்கும், அரசுக்கும் இது ஆறுதல் அளிக்கும் விஷயங்களாகும் என்றும் அகில இந்திய வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று ஜூன் மாதம் 1 முதல் தேதியே தொடங்கிய இந்த பருவமழை இந்தியாவின் உணவுப்பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் என்றும் காரீப் பருவ விளைச்சலை அதிகரிக்கும் விதத்தில் தொடர்ச்சியாக நான்கு மாதத்துக்கு இந்தியா முழுவதும் கை கொடுக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

பொதுவாக கேரளாவில் தொடங்கி படிப்படியாக இந்திய மேற்கு மாநிலங்கள், பிறகு வட இந்தியப் பகுதிகளில் பொழியும் இந்த மழை ஒரே சமயத்தில் கேரளா உட்பட மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகப் பகுதிகளில் பொழியத் தொடங்கியதும், அரபிக்கடலில் தோன்றிய காற்றழுத்தமும் மிக சிறந்த அறிகுறிகளாகும்.

அதே சமயம் ஜூன் கடைசியில் அல்லது ஜூலை மாதத்தில்தான் தென்மேற்கு பருவமழையின் பயனை தமிழகம் ஓரளவு பெறும், ஆனால் கேரளாவில் தொடங்கிய அதே நேரத்தில் தமிழகத்தில் சென்னை உட்பட 17 வடமாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் பெய்துள்ளது ஆச்சரியமும், அதிஷ்டமும் நிறைந்ததாகும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வட இந்தியா "இயல்பான" மழையைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் மத்திய இந்தியா மற்றும் தெற்கு தீபகற்பத்தில் இயல்பான மழை பெய்யும் என்றும் கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் நாட்டின் பிற பகுதிகளை விட குறைந்த மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் அகில இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வேளாண் நிபுணர்கள் தகவல்

இந்த 2020 ஆம் ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை இந்திய தேசத்தின் கோடான கோடி மக்களுக்கு உணவளிக்கும் கரிஃப் பருவ பயிர்களுக்கு வலுவான வழிகாட்டும் பருவமழையாக இருப்பதற்கான கண்ணோட்டத்தை அளித்துள்ளதாக தனியார் வேளாண் தரவு நிறுவனமான ஹம்மிங்பேர்டின் புதுப்பிக்கப்பட்ட தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து விவசாயத்தையும், விவசாயிகளையும் மீட்க இந்த ஆண்டு ஏராளமான சலுகைகளையும், மானியங்களையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக விவசாயிகளுக்கான வட்டி மானியம், கடன் தொகை செலுத்த நீண்ட அவகாசம், கூட்டுறவு வங்கிகள் மூலம் தனிநபர் கடன் வசதிகள், விவசாய மகளிருக்கான சுய உதவி குழுக்களுக்கான நிதி அதிகரிப்பு, நான்கு தவணைகளாக அளிக்கப்படும் விவசாயிகளுக்கான உதவித்தொகை ரூ.6 ஆயிரம்.

இது மட்டுமல்லாமல் 14 காரீப் பயிர்களின் குறைந்தபட்ச விற்பனை விலையை (எம்எஸ்பி) 50-83 சதவீதம் அதிகரிப்பதாக 2 நாட்களுக்கு முன் அறிவித்தது போன்றவற்றுடன் இந்த ஆண்டு நல்ல மழை பொழிவும் இருப்பதால் விவசாயிகளின் ஆண்டு வருமானம் 2 மடங்குக்கு மேல் இந்த ஆண்டு கூடும், மேலும் கொரோனாவால் வீழ்ந்துபோன இந்திய உள்நாட்டு உற்பத்தியளவு கூடவும் இந்த மழை வழி வகுக்கும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.

https://thefederal.com/news/monsoon-onset-projects-strong-outlook-for-kharif-crops-this-year/

Next Story