Top
undefined
Begin typing your search above and press return to search.

பா.ஜ.க தலைவர் பியூஷ் கோயலின் தாயார் மும்பையில் காலமானார்!

பா.ஜ.க தலைவர் பியூஷ் கோயலின் தாயார் மும்பையில் காலமானார்!

Mohan RajBy : Mohan Raj

  |  6 Jun 2020 8:15 AM GMT

ரயில்வே அமைச்சர் மற்றும் பா.ஜ.க-வின் தலைவர்களில் ஒருவரான பியூஷ் கோயலின் தாயார் பா.ஜ.க மூத்த தலைவர் சந்திரகாந்த கோயல் நேற்று வெள்ளியன்று இயற்கை எய்தினார்.

முதுமை காரணமாக அவர் வெள்ளிக்கிழமை இரவு இறந்தார். அவர் இறந்த செய்தியை பியூஷ் கோயல் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

இதில், தனது தாயார் தனது முழு வாழ்க்கையையும் மக்கள் சேவைக்காக அர்ப்பணித்ததாகவும், மற்றவர்களும் இதைச் செய்ய ஊக்கப்படுத்தியதாகவும் கூறினார்.

பாஜக தலைவர் மற்றும் மகாராஷ்டிராவின் முன்னாள் மந்திரி வினோத் தாவ்டே சனிக்கிழமை காலை அவர் தகனம் செய்யப்பட்டார் என்று கூறினார்.

பியூஷின் தாயார் சந்திரகாந்த கோயல் மும்பையில் ஒரு கார்ப்பரேட்டராக இருந்தார். பின்னர், அவர் பா.ஜ.க-வை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

அவரது கணவர் மறைந்த வேத் பிரகாஷ் கோயல் நீண்ட காலமாக பா.ஜ.க தேசிய பொருளாளராக இருந்தார். அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கத்தில் கப்பல் அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

Next Story