Top
undefined
Begin typing your search above and press return to search.

மரக்காணத்தில் குளத்தை தூர்வாரும் போது ஆயிரம் வருடம் பழமையான விஷ்ணு சிலை கண்டெடுப்பு.!

மரக்காணத்தில் குளத்தை தூர்வாரும் போது ஆயிரம் வருடம் பழமையான விஷ்ணு சிலை கண்டெடுப்பு.!

Vignesh KBy : Vignesh K

  |  7 July 2020 8:24 AM GMT

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சியில் கரிப்பாளையம் கிராமத்தில் இருக்கும் அங்காளம்மன் கோவிலில் குளம் தூர்வாரும் பணி கடந்த 3 நாட்களாக நடந்து வருகிறது. அந்த சமயத்தில் இன்று காலை அப்பணி நடந்து கொண்டிருந்தபோது பொக்லையன் மூலம் மண்ணைத் தோண்டும் போது திடீரென்று ஒரு சத்தம் கேட்டுள்ளது. அதனால் அங்கு மெதுவாக தோண்டப்பட்டத்தில் நான்கு அடி உயரமுள்ள கல்லால் செதுக்கப்பட்ட மகாவிஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.


இந்த விஷயத்தை பொக்லைன் ஓட்டுநர் அப்பகுதி மக்களிடம் தெரிவித்துள்ளார். பின்னர் மகாவிஷ்ணு சிலையை கரிப்பாளையம் மக்கள் மாரியம்மன் கோவிலில் வைத்து அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்து வழிபட்டனர்.

இதனை பற்றிய தகவல் அறிந்த மரக்காணம் வட்டாட்சியர் ஞானம் விரைந்து சென்று மகாவிஷ்ணு சிலை பார்வையிட்டு தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். மகா விஷ்ணு சிலை இங்கேயே வைத்து வழிபட வேண்டும் மக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

இந்த மகா விஷ்ணு சிலை சுமார் ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்ததாக இருக்கும் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Next Story