Top
undefined
Begin typing your search above and press return to search.

கொட்டும் மழையிலும் குமரியில் வேல் பூஜை.!

கொட்டும் மழையிலும் குமரியில் வேல் பூஜை.!

By : Sundar S

  |  9 Aug 2020 2:06 PM GMT

கறுப்பர் கூட்டம் என்ற அமைப்பினர் தமிழ் கடவுள் முருகனை வேண்டிப் பாடும் கந்தசஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தும் போக்கை நினைத்து உலகமெங்கும் வாழும் தமிழர்கள் மன வேதனையில் உள்ளனர். அந்த கறுப்பர் கூட்டம் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று மாலை வேல்பூஜை நடத்த அழைப்பு விடுக்க பட்டது. அதன் அடிப்படையில் குமரி மாவட்டத்தில் கொட்டும் மழையிலும் வேல்பூஜை நடைபெற்றது.

பக்தர்களின் தீமையான வினைகள் அனைத்தையும் அழித்து, நன்மைகளை அருளும் ஆயுதமாகவும், முருகனின் அம்சமாகவும் இருப்பது தான் வேலாயுதம் ஆகும். முருகப்பெருமானுக்குரிய ஆயுதமாக இருப்பதுதான் வேல். தீய சக்திகளின் அம்சமான அரக்கர்களை ஒழித்து, நன்மைகளை அருளும் அந்த வேல் முருகனின் அம்சமாகவே பாவிக்கப்பட்டு வணங்கப்படுகிறது.

கோடிக்கணக்கான பக்தர்களின் ஒற்றுமை உணர்வினை உலகிற்கு காட்டவும், மத நல்லிணக்கத்திற்கு எதிரான சக்திகளை முறியடிக்கவும் இந்த பூஜை இன்று நடைபெற்றது


Next Story