Top
undefined
Begin typing your search above and press return to search.

பாகிஸ்தானில் திருமணமான இந்து பெண் கடத்தப்பட்ட சம்பவம் - வலுக்கட்டாயமாக இஸ்லாத்திற்கு மாற்றி திருமணம் செய்ய முயற்சிக்கும் முஹமது ஆதில் - வீடியோ உள்ளே.!

பாகிஸ்தானில் திருமணமான இந்து பெண் கடத்தப்பட்ட சம்பவம் - வலுக்கட்டாயமாக இஸ்லாத்திற்கு மாற்றி திருமணம் செய்ய முயற்சிக்கும் முஹமது ஆதில் - வீடியோ உள்ளே.!

VinithaBy : Vinitha

  |  9 Aug 2020 1:55 PM GMT

பயங்கரவாத பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிரான கொடூரங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. சிறுபான்மை இந்துக்களை கடத்திச் செல்லும் மற்றொரு இழிவான செயல் பாகிஸ்தான் நாட்டில் பதிவாகியுள்ளது. முஹம்மது ஆதில் என்ற ஒருவரின் தலைமையிலான சில ஆயுததாரிகள் வியாழக்கிழமை இந்துக்களின் வீட்டிற்குள் நுழைந்து முழு குடும்பத்தினரையும் தாக்கிவிட்டு கவிதா என்ற திருமணமான பெண்ணை கடத்திச் சென்றனர். ஆயுதமேந்திய முஸ்லீம் கும்பல் அந்தப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக கடத்திச் சென்றது என்று ஆர்வலர் ரஹத் ஆஸ்டின் தெரிவித்தார்.

அப்பெண்ணின் குடும்பத்தினர் பாங்ரியோவில் உள்ள ஒரு உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இருப்பினும் அந்த குடும்பத்திற்கு உதவ போலீசார் மறுத்துள்ளனர் என்று ரஹத் ஆஸ்டின் கூறினார். கடத்தப்பட்டவர்கள் கவிதாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர் என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.

ஒரு நாள் கழித்து கவிதா கட்டாயமாக இஸ்லாமாக மாற்றப்பட்டு கடத்திச்சென்றவரை திருமணம் செய்து கொள்ளும்படி செய்யப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டாலும் அந்த பெண்மணி தனது அருகில் அமர்ந்திருக்கும் கடத்தல்காரன் முஹம்மது ஆதில் என்பவரை திருமணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்துவதை கீழே உள்ள அந்த வீடியோவில் காணலாம்.

இந்து மக்கள் தொகையினர் 90 சதவீதத்தினர் வசிக்கும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்துக்கள் மீதான அட்டூழியங்கள் சமீபத்தில் அதிகரித்துள்ளது. பாகிஸ்தானின் சிந்து மிட்டாரி மாவட்டத்தில் தாலுகாவாக இருக்கும் ஹலா நகரின் ஆற்றிலிருந்து மோகன் பாகரி என்ற இந்து இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் 102 இந்துக்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் இந்து கோவில்களில் சிலைகள் அனைத்தும் அழிக்கப்பட்டு மசூதியாக மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிந்துவில் 14 வயது இந்து சிறுமி கடத்தப்பட்டார்!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஹலா மிட்டாரி மாவட்டமான சைதாபாத்தில் ஜூன் 27ஆம் தேதி கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் அவர் இஸ்லாத்திற்கு மாற வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் என்றும் ரஹத் ஆஸ்டின் உறுதிப்படுத்தினார். கடத்தப்பட்ட இந்த சிறுமியின் தாய் துக்கத்துடன் மனமுடைந்து காணப்பட்டதாகவும் "இஸ்லாமிய நாட்டில் பிறப்பது ஒரு சாபம்" என்றும் அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான அட்டூழியங்களின் வரலாறு உள்ளது. குறிப்பாக பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் முஸ்லிம்களால் பெரிதும் துன்புறுத்தப்படுகிறார்கள்.இது மட்டுமல்லாமல் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது, வலுக்கட்டாயமாக இஸ்லாத்திற்கு மாற்றப்படுவது போன்ற செயல்களால் அவர்கள் வாழ்க்கையே நரகம் ஆகிவிட்டது என்று கூறியுள்ளார்கள். இதுபோன்ற சம்பவங்கள் அந்த நாட்டில் நடந்து கொண்டே இருப்பதால் இந்து மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Next Story