Top
undefined
Begin typing your search above and press return to search.

புரட்டாசி மாதத்தின் பூஜைகளை செய்ய சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை நாளை திறப்பு.!

புரட்டாசி மாதத்தின் பூஜைகளை செய்ய சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை நாளை திறப்பு.!

Vignesh KBy : Vignesh K

  |  15 Sep 2020 8:59 AM GMT

புரட்டாசி மாதத்தின் பூஜைகளை செய்வதற்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறக்கப்பட உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து தமிழ் மாதத்தின் முதல் ஐந்து நாட்கள் நடை திறந்து பூஜை செய்வது வழக்கம். இதனால் புரட்டாசி மாதத்தின் பூஜைகளை செய்வதற்கு நாளை கோவிலின் நடை திறக்கப்பட உள்ளது. நாளை மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து தீபாராதனை நடத்துவார். இதன்பின்பு ஊழியர்கள், காவலர்கள் ஆகியோருக்கு பிரசாதம் கொடுக்கப்பட உள்ளது. நாளை மறுநாள் முதல் சிறப்பு பூஜைகள் எதுவும் நடக்காது. இரவு 7.30 மணிக்கு நடை சாத்தப்படும்.

பின்னர் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி ஐந்து நாட்கள் அதிகாலை 5 மணி முதல் காலை 10.30 மணி வரை வரையும் மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடக்கும். குழுவுக்கான வழிமுறைகளை பின்பற்றி சிறப்பு பூஜைகளை நெய்யபிஷேகம் படிபூஜை உதயாஸ்தமன பூஜை நடக்காது. கொரோனா வைரஸ் காரணத்தினால் அதன் வழிகாட்டு நெறிமுறைபடி சிறப்பு பூஜைகளான நெய்யபிஷேகம், படி பூஜை, உதயா ஸ்தமன பூஜை போன்றவை நடக்காது.

இந்த ஐந்து நாட்களில் சிறப்பு பூஜைகளுக்கு பின்பு 21ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடை சாத்தப்பட்டு புரட்டாசி மாத பூஜைகள் நிறைவு அடைகிறது. கொரோனாவால் இணையதளம் மூலம் பக்தர்கள் வழிபாடு செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Next Story