Top
undefined
Begin typing your search above and press return to search.

அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தினால் ஆயிரம் மடங்கு பதிலடி கொடுப்போம் – ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்.!

அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தினால் ஆயிரம் மடங்கு பதிலடி கொடுப்போம் – ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்.!

Vignesh KBy : Vignesh K

  |  15 Sep 2020 11:47 AM GMT

அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தினால் ஆயிரம் மடங்கு பதிலடி ஈரானுக்கு கொடுப்போம் என அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் ஈரானின் முக்கிய தளபதியான காசிம் சுலைமானியை ஏவுகணை கொண்டு அமெரிக்கா கொலை செய்தது. இதையடுத்து ஈரான் ராணுவம் ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளத்தில் தாக்குதல் செய்தது. அதில் 100க்கும் மேலான அமெரிக்கா வீரர்கள் பயங்கர காயமடைந்தனர்.

கடந்த 78 வருடங்களில் இது நேராக நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். அணு ஆயுத ஒப்பந்தம் காரணமாக அமெரிக்கா ஈரான் மீது கொடுக்கும் பொருளாதார நெருக்கடி காரணத்தினால் இரண்டு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது.

தற்போது நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் உள்ள அமெரிக்க தூதரை கொலை செய்வதற்கு ஈரான் சதி வேலைகளை செய்து வருவதாக அமெரிக்க ஊடகங்கள்தகவலை தெரிவித்துள்ளது.


இதைப்பற்றி டிரம்ப் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது; பத்திரிக்கைகள் அளித்த தகவலின்படி ஈரான் அமெரிக்க தூதரை கொலை செய்வதற்கு சதிவேலைகளை நடத்தி வருகிறது. அமெரிக்கா மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் அதன் பின்பு ஆயிரம் மடங்கு ஈரான் மீது தாக்குதல் கொடுக்கப்படும் என அதிபர் பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/realDonaldTrump/status/1305704032988622848

Next Story