Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் உள்ள பகுதிகளை சொந்தம் கொண்டாடும் நேபாளம் - நேபாள கம்யூனிஸ்ட் கட்சியினால் இரு நாட்டிற்கு இடையே பதற்றம்.!

இந்தியாவில் உள்ள பகுதிகளை சொந்தம் கொண்டாடும் நேபாளம் - நேபாள கம்யூனிஸ்ட் கட்சியினால் இரு நாட்டிற்கு இடையே பதற்றம்.!

VinithaBy : Vinitha

  |  18 Sep 2020 5:54 PM GMT

நேபாளம் தொடர்ந்து தவறான கொள்கைகளை கடைபிடிப்பதன் மூலம் இந்தியா- நேபாளம் இடையிலான இருதரப்பு உறவில் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. சமீபத்திய தகவல்களின்படி நேபாளத்தில் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி நேபாள தேசிய முன்னணியுடன் கைகோர்த்து ஒருங்கிணைந்த 'கிரேட்டர் நேபாளத்திற்காக' ஒரு புதிய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இதில் இந்திய நகரங்களான டெஹ்ராடூன் மற்றும் நைனிடால் போன்றவற்றை உரிமை கொண்டாடி வருகிறது.

நேபாள கம்யூனிஸ்டுகள் 'கிரேட்டர் நேபாளம்' பிரச்சாரம் மூலம் சட்டவிரோதமாக இந்திய நகரங்களை உரிமை கோருவதோடு உத்தரகண்ட், இமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், பீகார் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளுக்கும் உரிமை கோரியுள்ளனர். கிழக்கிந்திய கம்பெனிக்கும் அப்போதைய ஆளும் ஸ்தாபனத்திற்கும் இடையில் 1816 இல் கையெழுத்திடப்பட்ட 'சுகாலி' நேபாள ஒப்பந்தத்தை மேற்கோள் காட்டி, தற்போதைய நேபாள ஆளும் கட்சியினர் இந்திய பிரதேசங்களை உரிமை கோருகின்றனர். இதற்கென்று ஒரு சமூக ஊடக பிரச்சாரத்தையும் அவர்கள் ஆரம்பித்துள்ளனர்.

சமூக ஊடக தளங்களில் உள்ள பல நேபாளிகள் கிரேட்டர் நேபாளம் என்ற பேஸ்புக் பக்கத்தை பின் தொடர்கின்றனர். இவர்கள் இந்தியாவில் உள்ள சில பகுதிகளை நேபாளத்துஞன் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் இந்தியாவிற்கும் நேபாளத்திற்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. பிரதமராக கே.பி. ஒலி நேபாளத்தில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே கிரேட்டர் நேபாளத்திற்கான பிரச்சாரங்கள் அதிகரித்துள்ளது. முன்னதாக நேபாளம் 2019 ஏப்ரல் 8 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையிலும் இந்த பிரச்சினையை எழுப்பியிருந்தது.

இந்திய பிராந்தியங்களுக்கு உரிமை கோரி, இந்தியப் பகுதிகளான லிம்பியாதுரா, லிபுலேக் மற்றும் கலபானி ஆகியவற்றை அதன் புதிய அரசியல் வரைபடத்தில் நேபாளம் சேர்த்த செயல் இந்தியாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்தியாவுக்கு எதிராக செயல்படுவதற்கு நேபாளத்தை சீனா தூண்டி விடுவதாக தெரிகிறது. நேபாள பிரதமர் கே.பி. ஒலியும் இந்தியாவுக்கு எதிரான எல்லைப் பிரச்சினையை முன்னெடுக்க சீனாவிலிருந்து பெரும் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சீன அரசாங்கம் நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலிக்கு பல மில்லியன் டாலர்களை அளிப்பதாக கூறப்படுகிறது.

அண்மையில் ஜெனீவா வங்கிக் கணக்கில் ஒலி ₹41.34 கோடியை டெபாசிட் செய்ததாக நேபாளத்தில் குற்றச்சாட்டுகள் உள்ளன. சீனாவின் உத்தரவின் பேரில், ஜூன் மாதத்தில் நேபாள நாடாளுமன்றம் நாட்டின் அரசியலமைப்பில் லிம்பியாதுரா, லிபுலேக் மற்றும் கலபானி ஆகிய இந்தியப் பகுதிகளை சேர்த்து நாட்டின் வரைபடத்தைப் புதுப்பிப்பதற்கான திருத்தத்தை நிறைவேற்றியது.

அத்தகைய "நியாயப்படுத்தப்படாத வரைபடக் கூற்றில்" இருந்து விலகி, இந்தியாவின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் மதிக்குமாறு நேபாளத்தை இந்தியா வலியுறுத்தியது. இருப்பினும் நேபாளத்தில் உள்ள கம்யூனிஸ்டுகள் இரு நாடுகளுக்கிடையில் தற்போதுள்ள எல்லையை மாற்றி அமைக்குமாறு வலியுறுத்தி வருவது இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இருக்கும் நல்லுறவை பாதிக்கும் செயலாகவே கருதப்படுகிறது.

Next Story