Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்த வகை இரத்தப் பிரிவு உள்ளவரா நீங்கள்? கொரானா வைரஸ் பாதிப்பு குறைவாக இருக்கும்.!

இந்த வகை இரத்தப் பிரிவு உள்ளவரா நீங்கள்? கொரானா வைரஸ் பாதிப்பு குறைவாக இருக்கும்.!

BharathiBy : Bharathi

  |  17 Oct 2020 11:30 AM GMT

இந்த கொரோனா வைரஸ் காலகட்டத்தில் பல்வேறு நிறுவனங்கள் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் COVID-19 க்கு நேர்மறை சோதனை செய்த 4,73,000 க்கும் மேற்பட்ட நபர்களின் டேனிஷ் சுகாதார பதிவேட்டை ஓடென்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்கள்ஆய்வு செய்தனர்.

பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் 2.2 மில்லியனுக்கும் அதிகமான கட்டுப்பாட்டு குழுவுடன் ஒப்பிடப்பட்டது. அதன் முடிவில் இரத்த வகை O உடையவர்களுக்கு மற்ற இரத்த வகையை சேர்ந்தவர்களை விட COVID-19 தொற்று 'O' ரத்த வகையை உடையவர்களுக்கு குறைவாக இருப்பதை அவர்கள் ஆய்வில் கண்டறிந்தனர்.



இந்த ஆய்வைப் பற்றி டென்மார்க் பல்கலைக்கழக ஆய்வு ஆசிரியர் டோர்பன் பாரிங்டன் கூறுகையில்," இந்த ஆராய்ச்சியில் கட்டுப்பாட்டு குழுவின் முடிவுகள் மிகவும் அவசியமாக கவனிக்கப்பட்டது மேலும் இந்த முடிவானது ஒவ்வொரு நாட்டிற்கும் அவர்களுடைய ரத்த வகை பாதிப்பு மற்றும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறும் இந்த முடிவு வேறுபடலாம். மேலும் எங்களுடைய நாடு ஒத்த தன்மையுடைய மக்களால் சூழ்ந்துள்ளதால் இந்த முடிவு மிகவும் நம்பகத்தன்மை ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று அவர் கூறினார்.



அதாவது 'O' இரத்த வகை கொண்டவர்கள் பாதிப்பு குறைவாக உட்படுவதாக, A, B மற்றும் AB இரத்த வகை கொண்டவர்கள் இந்த வைரஸ் தொற்றுக்கு அதிகமாக பாதிக்கப்படுவதாகவும், இவர்களுடைய ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. அதாவது ஓ இரத்த வகையை கொண்டவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு குறைவாக இருப்பதாகவும் மற்ற இரத்த வகை கொண்டவர்களுக்கு இந்த பாதிப்பு சற்று அதிகமாக இருப்பதாகவும் இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதைப் போன்ற மற்றொரு ஆய்வில் அதாவது கிளினிகல் நோய்த்தொற்று இதழ் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வின்படி, " O இரத்த வகை கொண்டவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று சற்று அதிகமாக இருக்கும் என்றும், மேலும் O இரத்த வகையில் வைரஸின் பாதிப்பு அதிகமாக இருக்கும் அபாயம் ஏற்படும் என்றும் அந்த ஆய்வு ஒரு தகவலை வெளியிட்டுள்ளது".

Next Story