Top
undefined
Begin typing your search above and press return to search.

ஃபைனான்சியரை காரில் கடத்திய தி.மு.க கவுன்சிலர் - பணம் கேட்டு மிரட்டலா.?

ஃபைனான்சியரை காரில் கடத்திய தி.மு.க கவுன்சிலர் - பணம் கேட்டு மிரட்டலா.?

VinithaBy : Vinitha

  |  17 Oct 2020 11:30 AM GMT

பொள்ளாச்சியில் கோட்டூர் சாலை அருகே வட்டிக்குப் பணம் கொடுப்பவரை கடத்திச் சென்று ஒரு குடோனில் அடைத்து வைத்து அடித்து துன்புறுத்திய முன்னாள் திமுக கவுன்சிலர் உட்பட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் வேளையில் கோட்டூர் சாலையில் இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு நிதியுதவி செய்யும் ஃபைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்த பொள்ளாச்சியை சேர்ந்த கே.சாந்தகுமார் (40) என்பவரை வழிமறித்த ஆறு பேர் கொண்ட கும்பல் அவரைக் காரில் கடத்தியுள்ளது.




சாந்த குமாரைக் கடத்திச் சென்றவர்கள் அவரை தாமரைக்குளத்திற்கு அருகிலுள்ள ஒரு குடோனுக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு அவர்கள் அவரைத் தாக்கி துன்புறுத்திய பின்னர் மாலையில் சென்ட்ராம்பாளையம் அருகே அவரை விட்டுச் சென்றதாகவும் காவல் துறையினர் கூறியுள்ளனர்.

இதையடுத்து சாந்தகுமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சாந்தகுமார் அளித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் சாந்தகுமார் பலரிடம் கடன் வாங்கி அதைத் திருப்பிச் செலுத்தாமல் இருந்து வந்தது தெரிய வந்தது. இதனால் குற்றம்‌ சாட்டப்பட்டு உள்ளவர்கள் அவரை கடத்திச் சென்று அவரை அடித்து உதைத்து பணத்தை திரும்ப கேட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை அன்று பொள்ளாச்சி நகராட்சியின் முன்னாள் தி.மு.க. கவுன்சிலர் எம்.கண்ணன் (51) காமாட்சி நகரைச் சேர்ந்த ஆர்.நவீன்குமார் (29), சுலேஸ்வரன்பட்டியைச் சேர்ந்த ஜான், 26, மற்றும் பொள்ளாச்சி அருகே கண்ணப்பன் நகரைச் சேர்ந்த ஸ்டாலின் (30) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு காரை‌ பறிமுதல் செய்தனர்.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருளரசு கூறுகையில், "எங்கள் குழு சாந்தகுமார் கடத்தப்பட்ட இடத்திலிருந்து சிசிடிவி காட்சிகளை சேகரித்தது. கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரின் பதிவு எண்ணை நாங்கள் காட்சிகளிலிருந்து சேகரித்தபோது, ​​அது போலியானது என்று கண்டறியப்பட்டது. காரைத் தொடர்ந்து சென்ற மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணைக் கண்டுபிடித்து நால்வரையும் கைது செய்தோம். " என்று கூறியுள்ளார். எனினும் இந்த கும்பல் சாந்தகுமாரிடம் பணம் எதுவும் கோரவில்லை என்றும் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

இந்த கும்பலுடன் தொடர்பில் இருந்த சுலேஸ்வரன்பட்டியைச் சேர்ந்த எஸ்.சதிஷ்குமார் 27, மற்றும் பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள கண்ணப்பன் நகரைச் சேர்ந்த ஆனைமலை ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த 6 பேர் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 294 (பி), 323, 341, 342, 363 மற்றும் 506 (ii) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Next Story